ஜக்கி வாசுதேவ்-க்கு எதிராக அவதூறு பரப்புவதா? ஈஷா கடும் கண்டனம்!!

 

ஜக்கி வாசுதேவ்-க்கு எதிராக அவதூறு பரப்புவதா? ஈஷா கடும் கண்டனம்!!

அழிந்து வரும் தமிழக கோவில்களை காக்கும் உன்னதமான பணியை முன்னெடுத்துள்ள சத்குருவுக்கு எதிராக ஆதாரமின்றி அவதூறு பரப்புவதாக ஈஷா கண்டித்துள்ளது.

கர்நாடகத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியிருப்பவர் ஜக்கி வாசுதேவ் என்று தெய்வ தமிழ் பேரவை தலைவர் பெ.மணியரசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் தமிழர் ஆன்மீகத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்; ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக அவர் ஒலிக்கிறார். தமிழக கோவில்களை கைப்பற்ற ஜக்கி வாசுதேவ் ஒரு சிலரால் களம் இறக்கப்பட்டு உள்ளார். ”என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கோவில் அடிமை நிறுத்து இயக்கம் தமிழக மக்களிடம் நம் கோவில்களின் இன்றைய நிலை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக கோவில்கள் தமிழ் கலாச்சாரத்தின் பெருமை, இக்கோவில்களின் இன்றைய நிலையைக் கண்டு தமிழ் மக்கள் மனம் பதைத்து கோவில்களை பக்தர்களே நிர்வகிக்க வேண்டும் என்ற உறுதியினை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.பல லட்சக்கணக்கான பக்தர்களின் குரலாகவே சத்குரு ஒலித்துள்ளார். இவ்வியக்கம் பல்வேறு அரசியல் தளங்களிலும் பல வகைகளில் ஆதரவை பெற்றுள்ளது.

ஜக்கி வாசுதேவ்-க்கு எதிராக அவதூறு பரப்புவதா? ஈஷா கடும் கண்டனம்!!

இந்நிலையில் சென்னையில் சிலர் நேற்று (ஏப்ரல் 13) நடத்திய செய்தியாளர் சந்திப்பு, சத்குரு மற்றும் ஈஷா யோக மையம் மீது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம் இந்த இயக்கத்தையும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் இழிவுபடுத்த முனையும் அறிவீனமான முயற்சி. தேர்தலுக்கு முன்பே ஜனநாயக முறையில் தமிழ் மக்கள் தங்கள் வாழ்வோடு ஒன்றிணைந்த கோவில்களை விடுவிக்க கோரிய இயக்கத்தை சிறுமைப்படுத்தும் இந்த முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சத்குருவும், ஈஷா யோக மையமும் செய்த பெரும் களப்பணிகளின் விளைவாக தமிழர்கள் சத்குருவை போற்றுதலுக்குரியவராக பார்க்கின்றனர். ஈஷா யோக மையத்தின் செயல்களை முடக்க பல்வேறு மதவாத, தேசவிரோத அமைப்புகள் தொடர்ச்சியாக செய்த சதிகள் தன்னார்வ தொண்டர்களின் ஓய்வறியா தன்னலமில்லா முயற்சியால் வெற்றி பெறவில்லை.

சொற்பநேர நீர்குமிழிகளாய் உருவாகியுள்ள இந்த குழுக்கள், அறநிலையத்துறை, கோவில்களின் பரிதாப நிலையை பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்த போது ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது தமிழர்களுக்கு கோவிலை யார் நிர்வகிக்க வேண்டும் என்று போதனை தர தேவையில்லை. மக்கள் இயக்கத்தை தடம்புரள வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிப்படும் வெற்று கூச்சல்களுக்கு செவி சாய்க்காமல், ஈஷா யோக மையம் ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்படும் அரசுடன் இணைந்து செயல்பட்டு தமிழக கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க தீர்வு காணும்.

ஜக்கி வாசுதேவ்-க்கு எதிராக அவதூறு பரப்புவதா? ஈஷா கடும் கண்டனம்!!

இந்த செய்தியாளர் சந்திப்பில் பெரும்பாலும் அவதூறுகளும், அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுமே நிரம்பி இருந்தாலும், அதற்கும் இங்கு பதிலளித்துள்ளோம்.

  1. தமிழ்நாட்டின் ஆலயங்களை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்ள சத்குரு முயல்கிறாரா?

சத்குரு கோவில்களை அந்தந்த பகுதியில் உள்ள பக்தர்களே நிர்வகிக்க வேண்டும் என்கிறார். ஆனால் இவர்கள் அதை திரித்து கூறுகிறார்கள். உண்மையிலேயே இவர்களுடைய நோக்கம் கோவிலை பாதுகாக்க வேண்டும் என்பதாக இருந்தால், 1200 கடவுள் சிலைகள் இதுவரை களவு போயிருக்கிறதே அதை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

வெளி தணிக்கை (External Auditing ) நடத்த பட வேண்டும் என்ற சத்குருவின் கோரிக்கையை முன்மொழியாதது ஏன்? அறநிலைத்துறையில் நடக்கும் ஊழலை கேள்வி கேட்காதது ஏன்? 12000 கோவில்களில் பூஜை நடக்காமல் சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களின் ஆன்மாவான கோவில்களை காக்க முயலாதது ஏன்?

இப்படி கோவில்கள் அழிவது பற்றியும் அதை காப்பது பற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் , கோவிலை மீட்க நினைப்பவர்களை குற்றம் சொல்வது இந்த முறைகேட்டில் இவர்களுக்கும் பங்குள்ளதா என எண்ண வைக்கிறது.

  1. தமிழக கோவில்களை விடுவிக்க வேண்டும் என்பது பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் உள்ளது. அதையே தான் சத்குரு கூறியுள்ளார். எனவே பாஜக RSS குரலாக ஒலிக்கிறாரா சத்குரு ?

தமிழக கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்குரு அவர்கள் ஜனவரி 14 பொங்கல் திருநாள் அன்று முன்மொழிந்தார். அதன் பின் அனைத்து கட்சிகளும் கோவிலை விடுவிக்க வேண்டிய கோரிக்கையை தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கடிதம் எழுதினார்.

ஜக்கி வாசுதேவ்-க்கு எதிராக அவதூறு பரப்புவதா? ஈஷா கடும் கண்டனம்!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் கோவிலை விடுவிப்பதை சேர்த்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே “கோயில்கள் அரசின் பிடியிலிருந்து விடுபட்டு, நல்லவர்கள் கைகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு முயற்சிப்போம்” என்று கூறப்பட்டிருக்கிறது. இப்போது சத்குரு காங்கிரசின் குரலாக ஒலிக்கிறார் என சொல்லலாமா?

1970ல் விகடன் இதழ், மதசார்பற்ற அரசு கோவில்களை நிர்வகிப்பதை பக்தர்கள் விரும்பமாட்டார்கள் என்று தலையங்கமே எழுதியுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை இது மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதையே சத்குரு பிரதிபலிக்கிறார். கோவிலை பாதுகாக்க வேண்டும் என்பது எந்தக் கட்சியின் கொள்கையும் அல்ல, இது பக்தரின் கொள்கை மற்றும் கோரிக்கை.

  1. கர்நாடகத்தை சேர்ந்த சத்குரு தமிழக கோவில்களை மீட்பதை பற்றி பேசுவது ஏன்?
ஜக்கி வாசுதேவ்-க்கு எதிராக அவதூறு பரப்புவதா? ஈஷா கடும் கண்டனம்!!

‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என அந்த சிவ பெருமானை எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவராக வைத்தது தான் தமிழ் சைவ நெறி. இதில் கர்நாடகம், கேரளம், தமிழகம் என்ற பிரிவினை இல்லை. பிரிவினைவாதிகள் இப்போது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஆன்மீகத்தில் பிரிவினை காண தொடங்கி இருப்பது பரிதாபமானது.

தமிழர்களின் உரிமை போராட்டமான ஜல்லிக்கட்டு, தமிழர்களின் ஆரோக்கியம், கல்வி, ஆன்மிகம் நம் தமிழ் மொழி என அனைத்திலும் சத்குரு தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். தமிழ் மக்கள் சத்குருவின் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டு அவருக்கு பக்க பலமாக நிற்கிறார்கள். தமிழக கோவில்கள் தமிழ் மக்களின் உரிமை, அதை பக்தர்கள் நிர்வகிக்க தேவையானதை ஈஷா யோக மையம் தொடர்ந்து செய்யும்.

  1. ஈஷாவிற்கு எதிரான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்:

ஈஷாவிற்கு எதிராக பல்வேறு அடிப்படை ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள். இவை அனைத்தும் நீதிமன்றத்தில் பொய் என்று நிரூபிக்கபட்டுவிட்டது. மேலும் ஈஷா இணையதளத்தில் இதற்கு தெளிவான பதில்கள் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரமின்றி பழி சுமத்துவதற்கு முன் அதை படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

நேற்றுவரை இந்துமதத்தை எதிர்த்தவர்களும், நாத்திகவாதிகளும், கோவில்கள் மீது அக்கறை இல்லாதவர்களும் ஒரேநாளில் பக்தர்களாக மாறி இந்த ஆன்மீக இயக்கத்தை தொடங்கி இன்று இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர். இவர்களின் பின்னணியை சற்றே ஆராய்ந்தால், அனைவருக்கும் இவர்கள் நோக்கம் வெளிப்படையாக தெரியும்.

தொடர்ந்து அழிந்து வரும் நமது கோயில்களுக்காக ஒருங்கிணையாதவர்கள் இன்று தமிழக மக்கள் தங்கள் கோவில்களை மீட்க ஒருங்கிணையும் பொழுது அதை எதிர்க்கிறார்கள் எனில் இவர்களின் நோக்கம் என்ன? இவர்களை பின்னின்று இயக்கும் சக்திகள் எது? தமிழக கோவில்கள் மீட்கப்படாமல் முழுமையாக அழிந்து போக வேண்டும் என்று எண்ணுகின்ற கூட்டத்திற்கு இவர்கள் துணை போகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.