மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐசரி கணேஷ்!

 

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐசரி கணேஷ்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தலமான சிறுவாபுரி முருகன் கோயிலிலில் செவ்வாய் கிழமை அன்று மூலவரான பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால் அபிஷேசம் செய்தால், நினைத்த காரியம் நடக்கும், தடைகள் விலகும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் கடந்த 8 வாரங்களாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையின்போது சட்டத்திற்கு புறம்பாக கோயிலின் தக்கர் EO நாராயணன் மூலமாக கோயிலை திறந்து, ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐசரி கணேஷ்!

இது குறித்து ஒவ்வொரு முறையும் கிராம மக்கள் EO-விடம் முறையிட்டும், அதனை கண்டுக்கொள்ளாமல் ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மட்டும் வழிபட கோயிலை திறந்துவிட்டிருக்கிறார். அதேபோல், செவ்வாய்க்கிழமையான இன்னிக்கும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வழிபட வந்த ஐசரி கணேசுக்காக மட்டும் ஊரடங்கு விதிகளை மீறி கோயிலை திறந்துவிட்டு, அர்ச்சகர்களை வரவழைத்து பூஜைகள் நடத்தியுள்ளார் EO நாராயணன். இதனை கண்ட ஊர் மக்கள் ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கோயிலுனுள் வைத்து பூட்டி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறை வைத்தனர். பிறகு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஐசிரி கணேசை பொதுமக்கள் விடுவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.