உங்கள் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் படிக்கிறார்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

 

உங்கள் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் படிக்கிறார்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

கொரோனா நோய்த் தொற்று உலக முழுவதும் மக்களின் சுழற்சியையே மாற்றிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளே கொரோனாவை கண்டு அஞ்சி வருகின்றன. பல நாடுகளில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.

கொரோனாவின் அச்சுறுத்தல்களால் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற தேதியை முடிவு செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அதனால், தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை ஆன்லைன் வழியே பாடங்கள் நடத்தத் தொடங்கிவிட்டனர். தமிழக அரசும் கல்வித் தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

உங்கள் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் படிக்கிறார்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

ஆன்லைன் வழியே கல்வி கற்பித்தல் – கற்றல் சரிதானா… அதன் பாதகங்களைப் பட்டியலிடும் கல்வி செயற்பாட்டாளர்களின் கூற்றுகளும் கவனிக்கத் தக்கதே. ஆனால், ஆன்லைன் வழி கல்வி வேண்டுமா.. வேண்டாமா என்ற விவாதிக்கும் நிலைமை மாறி பல குழந்தைகள் இதற்குள் புகுத்தப்பட்டு விட்டனர். குறைந்த பட்சம் 2-3 லட்சம் குழந்தைகளாவது தினமும் ஆன் லைன் வழியே கற்றலைத் தொடங்கி விட்டனர்.

எனவே, ஆன்லைனில் கல்வி கற்கும் குழந்தைகளின் நலன் சார்ந்தும் பேச வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அதனால், ஆன்லைன் வழியே கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய 5 விஷயங்கள் பற்றி கூறுகிறார் ஆசிரியரும் கல்வி குறித்து நூல்களை எழுதும் எழுத்தாளருமான பிரியசகி.

உங்கள் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் படிக்கிறார்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

  1. முதல் விஷயம், ஆன்லைன் வழி நடத்தப்படும் கல்வி உங்கள் பிள்ளைக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கவனியுங்கள். குறிப்பாக, அதற்கு நேரத்தை முறையாகப் பயன் அளிக்கும் விதத்தில் செலவிடுகிறார்களா என்றும் பாருங்கள்.
  2. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது வீடியோ மற்றும் ஆடியோ வை ஆஃப் செய்யச் சொல்லிவிடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் பாடம் நடத்தும்போது தேவையில்லாத சத்தங்கள் மாணவர்களிடமிருந்து வந்துவிடக்கூடாது என்பதால். அதையே சில மாணவர்கள் வேறு வகையாகப் பயன்படுத்துகிறார்கள். வேறு யாருடனாவது சாட் பண்ணுவது, வேறு தளங்களில் வீடியோ பார்ப்பது எனச் செய்கிறார்கள். உங்கள் பிள்ளை அப்படிச் செய்கிறார்களா என்று செக் பண்ணுவது அவசியம்.
  3. அதிக நேரம் மொபைல் அல்லது கணினி திரையைப் பார்க்கும்போது சில குழந்தைகளுக்கு கண்களில் நீர் வருவது, அரிப்பது போன்ற உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, ஆன்லைன் வகுப்பினால் அவர்களின் உடல்நலத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என்று கவனியுங்கள்.
  4. மிகச் சில மாணவர்கள் ஆசிரியர் பாடம் நடத்தும்போது வீடியோவிலிருந்து ஸ்கிரின் ஷாட் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்பவர்கள் ஓரிருவர் தான் என்றாலும் நீங்கள் கவனம் வைப்பது நல்லது.
  5. ஆசிரியர் என்ன ஹோம் வொர்க் தருகிறார். அதை முறையாக உங்கள் பிள்ளை செய்கிறாரா என்றும் செக் பண்ணுங்கள். நேரடியாகப் பள்ளிக்குச் செல்வதென்றால் டைரியில் குறித்து அனுப்புவார்கள். இதில் அந்த வசதி இல்லாததால் நீங்களே செக் பண்ணுவதே சரியாக இருக்கும்.

 

உங்கள் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் படிக்கிறார்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
பொதுவாக ஒரு விஷயம், இண்டர்நெட் வசதியுடன் மொபைல் அல்லது லேப்டாப்பை உங்கள் பிள்ளையிடம் தர வேண்டிய சூழல் வந்துவிட்டது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் பிள்ளையை கண்காணிக்க முடியாது. அப்படிக் கண்காணித்தாலும் அது உங்கள் மீது அவநம்பிக்கையை அளித்துவிடும். அதனால், இணையம் பயன்படுத்துவதில் உள்ள ப்ளஸ், மைனஸ் விஷயங்களை உங்கள் குழந்தையின் வயதுக்கேற்ற மொழியில் பேசி புரிய வையுங்கள். அதுவே நீண்ட காலப் பயனைத் தரும். கெட்ட விஷயங்கள் பிள்ளைகளுக்குள் பழகுவதைபோல, உங்கள் பிள்ளையின் வழியே நல்ல விஷயங்கள் அவரோடு பழகும் நண்பர்களுக்கும் போய்ச் சேரும். அதற்கான வாய்ப்பை வழங்கத் தவறாதீர்கள்.