தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகிறாரா வி.பி.துரைசாமி? – பா.ஜ.க-வுக்குள் கொந்தளிப்பு

 

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகிறாரா வி.பி.துரைசாமி? – பா.ஜ.க-வுக்குள் கொந்தளிப்பு

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் பதவி அளிப்பதாக வி.பி.துரைசாமியை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் வி.பி.துரைசாமி. கடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போது எம்.பி சீட் கேட்டு காத்திருந்தார் துரைசாமி. அவரது பெயர் அறிவிக்கப்படும் என்றே பெரும்பாலான தி.மு.க-வினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சீட் கேட்காத அந்தியூர் செல்வராஜுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால், வி.பி.துரைசாமி மட்டுமல்ல, அந்தியூர் செல்வராஜ் கூட அதிர்ச்சியடைந்தார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகிறாரா வி.பி.துரைசாமி? – பா.ஜ.க-வுக்குள் கொந்தளிப்பு
எம்.பி சீட் மறுக்கப்பட்டதால் வெறுப்பின் உச்சத்தில் வி.பி.துரைசாமி இருக்கும் தகவல் அறிந்த பா.ஜ.க அவரை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தியது. எம்.பி பதவி இல்லை என்றால் என்ன, முக்கித்துவம் வாய்ந்த அரசு பதவியே தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதனால், திடீரென்று தமிழக பா.ஜ.க தலைவர் முருகனை சந்தித்ததும், அதன் பிறகு தி.மு.க-வில் இருந்து பதவி பறிக்கப்பட்டதும் அறிந்ததே.
தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக எல்.முருகன் இருந்தார். தற்போது அந்த பதவி காலியாக உள்ளது. அது வி.பி.துரைசாமிக்கு அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், தமிழக பா.ஜ.க-வில் உள்ளவர்கள் மத்தியில் கொந்தளிப்பான மனநிலை உருவாகி உள்ளது. கட்சியில் இத்தனை ஆண்டுகள் இருக்கிறோம், எங்களைவிட்டுவிட்டு தி.மு.க-வில் இருந்து ஒருவரை அழைத்து வந்துதான் பதவி வழங்க வேண்டுமா என்று தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.