இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

சில மாதங்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசுபொருளானது இளையராஜாவும் பிரசாத் ஸ்டூடியோவும் தான். ராஜாவின் இசைப் பயணத்துக்கு பல திருப்பங்களைக் கொடுத்த, தமிழ் மக்களுக்கு பல்வேறு சிறந்த பாடல்களை அருளிய பிரசாத் ஸ்டூடியோவில் தனி இசை அரங்கு அமைக்க அவருக்கு அந்த ஸ்டூடியோ நிர்வாகம் அனுமதி மறுத்தது.

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

இதையடுத்து வழக்கு தொடுக்கப்பட்டும் உரிய நீதி கிடைக்காமல் இறுதியில் சொந்தமாகவே ரெக்கார்டிங் தியேட்டரை உருவாக்கிவிட்டார். வெளிநாடுகளில் விருது வழங்குவதற்கே ஒரு கலைஞனைத் தாங்குபவர்களுக்கு மத்தியில், ஒரு மாபெரும் கலைஞனைத் தமிழ் சினிமா அவமானப்படுத்திவிட்டது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

அது போகட்டும்… தற்போது தனியாக ஒரு இசை அரங்கை நிறுவி, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி-சூரி நடிக்கும் படத்துக்கான பாடலையும் ரெக்கார்டிங் செய்துவிட்டார். இதுஒருபுறமிருக்க, வரலாறோ இளையராஜா பிரசாத் தியேட்டரை விட்டு வெளியேறுவதும், அதன்பின் தனியாக தியேட்டர் நிறுவுவதும் முதல் முறையல்ல என்கிறது. அந்த வகையில் இளையராஜா சொந்தமாக ரெக்கார்டிங் தியேட்டரைக் கட்டமைப்பது இதுவே முதல் முறை என்ற கருத்து பொய்த்துப் போகிறது.

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

90களின் ஆரம்பத்திலேயே பிரசாத் தியேட்டர் உரிமையாளருக்கும் இளையராஜாவுக்கும் பிணக்கு ஏற்பட்டுள்ளது. அப்போதே தனக்கென சொந்தமாக ஒரு தியேட்டரை உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தை அவர் உணர்ந்திருக்கிறார். பிரசாத் தியேட்டரை விட்டு வெளியேறிய சிறிது காலம் ஏவிஎம் ஸ்டூடியோவில் இசையமைத்துவந்துள்ளார் இளையராஜா.

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

அதன்பின், நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜிக்குச் சொந்தமான சுஜாதா டப்பிங் தியேட்டரை விலைக்கு வாங்கியிருக்கிறார். அதில் சில புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு புதுப்பித்து, அதற்கு ‘Ilaiyaraaja Music Universal’ (இளையராஜா மியுசிக் யுனிவர்சல்) என்று பெயரிட்டிருக்கிறார். அங்கு இளையராஜாவும் கார்த்திக் ராஜாவும் இசையமைத்துக் கொண்டிருந்துள்ளனர். இதற்கான ஆதரமாக சில படங்களில் டைட்டில் கார்டுகளில் இளையராஜா மியுசிக் யுனிவர்சல் என்ற ரெக்கார்டிங் தியேட்டரில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகக் காட்டுகின்றன.

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இளையராஜாவுக்குத் தான் சொந்தமாக தியேட்டர் இருக்கிறதெ. அப்புறம் எதற்காக அவர் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் மீண்டும் நுழைந்தார்? அதற்குக் காரணம் சாட்சாத் ஜெயலலிதா தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இதற்குப் பின்னால் இருந்து செயல்பட்டது சசிகலா என்றும் கூறுகிறார்கள். இணையாபிரியா தோழிகள் இருவரும் ராஜாவின் தியேட்டரை வளைத்துப் போட ஆசைப்பட்டதாகவும், அதற்கு இளையராஜா சம்மதிக்காததால் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டதாகக் கூறி இடிக்க ஜெயலலிதா உத்தரவிட்டாராம். ஜெயலலிதாவுக்கு யார் உத்தரவிட்டிருப்பார்கள் என்பதைச் சொல்லி தெரியவேண்டியதில்லை.

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

இந்தத் தகவல் உண்மையாக இருப்பதற்கே நூறு சதவீதம் வாய்ப்புள்ளது. ஏனென்றால், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் பையனூர் பண்ணை வீட்டை எப்படி மன்னார்குடி குடும்பம் அபகரித்துக் கொண்டது என்பது ஊரறிந்த உண்மை. இதுதொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. பல்வேறு பேட்டிகளில் கங்கை அமரன், தனது சொத்தை சசிகலா குடும்பத்தினர் அடித்து மிரட்டி பிடுங்கிவிட்டதாக ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள பையனூரில் பல கோடி மதிப்பு பெறும் 22 ஏக்கர் பண்ணை வீட்டை வெறும் 12 லட்சத்திற்கு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று அறியப்பட்ட சுதாகரன் தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் கூறியிருப்பார்.

இளையராஜாவின் தியேட்டரை இடித்த ஜெயலலிதா?… பின்னணியில் சசிகலா? – வரலாறு என்ன சொல்கிறது?

ஜெயலலிதா-சசிகலா சதியால் இளையராஜாவின் தியேட்டர் இடிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் ஆசியாவிலேயே மிகச் சிறந்த ஒலிப்பதிவு கூடமாக அது இருந்திருக்கக் கூடும் என இளையராஜாவின் ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர். பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களின் பேச்சுக்கும் அவர் ஆளாகியிருக்க மாட்டார் என்கின்றனர். இளையராஜாவுக்கு எப்போதும் இது ஒரு பொருட்டாகவே இருக்காது என்பதை அவரின் சமீபத்திய பேட்டியிலேயே உணர்ந்துகொள்ளலாம். சங்கு சுட்டாலும் வெண்மை தரும்; இளையராஜா நமக்கு இசையைத் தருவார்!