இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா சசிகலா?

 

இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா சசிகலா?

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்களிடம் பேசி அந்த ஆடியோவினை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். வீடியோவும் வெளியிட்டு வந்தார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா சசிகலா?

சசிகலாவால் அதிமுகவை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. அதிமுகவிற்குள் அவர் நுழையவே முடியாது என்று சொல்லி வந்தனர். ஆனால் ஓபிஎஸ் மட்டும் மவுனமாக இருந்து வந்தார். ஓபிஎஸ்ஸின் மவுனம் அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டெல்லியில் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர், சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு, சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று தெரிவித்தார் ஓபிஎஸ். அவரின் இந்த அதிரடிக்கு பின்னர் சசிகலா அமைதியாக இருக்கிறார். அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவில் இணையப்போகிறார் சசிகலா என்ற பேச்சுகள் இருந்த நிலையில், ஓபிஎஸ்சின் பேச்சினால் தொடர்ந்து ஆடியோ -வீடியோ வெளியிட்டு வந்த அவர், கடந்த ஒரு வாரமாக அமைதியாகவே இருக்கிறார்.

இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா சசிகலா?

இந்த நிலையில் சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க முயற்சிப்பதை விட அமமுகவ்விற்கு தலைமையேற்று தொண்டர்களை சந்தித்து வரவேண்டும் என்பதையே விரும்புவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இதனால்தான் ஆடியோ-வீடியோவை திடீரென்று நிறுத்திவிட்டாரா சசிகலா?

ஓபிஎஸ்சும் கைவிரித்துவிட்டதால் அடுத்து சசிகலா ஒன்றைத்தான் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார். அது பொதுச்செயலாளர் வழக்கு. அதிலும் பாதகமான தீர்ப்பு வந்துவிட்டால், மறுபடியும் அதிமுகவை கைப்பற்றி முயற்சிப்பது வீண். கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் அதிமுக தொண்டர்களை சந்திப்பதாக சசிகலா சொல்லி வந்தார். அதற்கு முன்னோட்டமாக தான் பலரிடம் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வந்தார். அதிமுகவின் சசிகலா நுழைய முடியாது என்பதற்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் வழக்கும் பாதகமாக வந்த பின்னர், அதிமுகவில் முயற்சிப்பதை விட அமமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமமுகவினரை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.