ரஜினி இவ்வளவு அவசரமாக ’அண்ணாத்தே’ சூட்டிங் செல்ல இதுதான் காரணம்?

 

ரஜினி இவ்வளவு அவசரமாக ’அண்ணாத்தே’ சூட்டிங் செல்ல இதுதான் காரணம்?

ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்தம் மாறுபாட்டின் காரணமாக, இந்தச் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது.

ஓரிரு மாதங்களுக்கு முன் நடந்த சில சம்பவங்களைப் பார்ப்போம். ரஜினி அரசியலுக்கு வருவாரா… மாட்டாரா என்ற பட்டிமன்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அவர் சார்பில் சொல்லப்பட்டதாக ஓர் அறிக்கை சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பைக் கூட்டியது. அதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. ‘ரஜினிக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது’ என்பதே அந்தத் தகவல்.

ரஜினி இவ்வளவு அவசரமாக ’அண்ணாத்தே’ சூட்டிங் செல்ல இதுதான் காரணம்?

அந்த அறிக்கை தன் மூலமாக வெளியாக வில்லை என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவ செய்திகள் அனைத்தும் உண்மையே என்று தெரிவித்திருந்தார். இது அவரின் ரசிகர்களை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால், அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றே கூறப்பட்டது.

ஆனால், அடுத்த சில நாட்களில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, டிசம்பர் மாதம் 31-ம் தேதி அறிக்கையில் ஜனவரியில் கட்சியைத் தொடங்கவும் போவதாகவும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பலராலும் அலசப்பட்டது. உடனே அவர் அண்ணாத்தே பட சூட்டிங்குக்குச் சென்றார். ஏன் இவ்வளவு அவசரமாக சூட்டிங் சென்றார் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்தது.

ரஜினி இவ்வளவு அவசரமாக ’அண்ணாத்தே’ சூட்டிங் செல்ல இதுதான் காரணம்?

ரஜினிக்கு அரசியலுக்கு விருப்பம் இல்லை என்பதாகவும், தேசிய கட்சி ஒன்று கடும் அழுத்தம் தந்து கட்சியைத் தொடங்க வற்புறுத்துவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்த அழுத்தத்திலிருந்து விடுபட முடியாததால் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜனவரியில் கட்சியைத் தொடங்கி விட்டால், அதன்பின் படப்பிடிப்புக்குச் செல்வது சாத்தியமில்லை. அதனால், அதற்கு முன்பே தனது காட்சிகளை நடித்து முடிக்க நினைத்தார் ரஜினி. அதனால்தான் அவசரம் அவசரமாக படபிடிப்புக்குச் செல்ல முடிவெடுத்தார்.

ரஜினி இவ்வளவு அவசரமாக ’அண்ணாத்தே’ சூட்டிங் செல்ல இதுதான் காரணம்?

ஒருவேளை ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க வில்லை என்ற முடிவு எடுத்திருக்கும்பட்சத்தில் இத்தனை அவசரமாக அவர் படபிடிப்புக்குச் சென்றிருக்க மாட்டார் என்றே அவரின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. ஏனெனில். அவர் அளித்த பேட்டியின்போதே, “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் எதிர்ப்புச் சக்தியை எப்போது குறைவாகவே வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடக்கூட வாய்ப்பில்லை’ என்பதாகவே கூறியிருந்தார்.

கொரோனா குறித்த இத்தனை கவனத்தோடு இருந்த ரஜினிகாந்த், ஜனவரியில் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் எனும்  சூழல் இருந்ததால் மட்டுமே தற்போது சூட்டிங்குக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதுவே, கொரோனாவுக்கு அருகே அவரைக் கொண்டு நிறுத்தியிருக்கிறது.