2019 –ல் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை இத்தனையா? அதிர்ச்சி டேட்டா

2019 –ல் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை இத்தனையா?  அதிர்ச்சி டேட்டா

இன்று காலையில் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விஷயம் ஜோதிஸ்ரீ தற்கொலை . மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் வசித்தவர் ஜோதிஸ்ரீ நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார்.

அவர் நிச்சயம் நீட் தேர்வில் வென்று, அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்வி படிப்பார் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்டது. ஆனால், தேர்வின் அழுத்தம் தாங்காமல் ஜோதிஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

2019 –ல் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை இத்தனையா?  அதிர்ச்சி டேட்டா

அரியலூர் அனிதாவின் தற்கொலை தொடங்கி ஜோதிஸ்ரீ யின் தற்கொலை ஏராளமான இளைஞர்களை தமிழகம் தற்கொலையால் இழந்துவிட்டது.  இவர்களின் தற்கொலைக்குப் பின் நீட் எனும் தேர்வு இருக்கிறது.  தமிழக தலைவர்கள் பலரும் ஜோதிஸ்ரீயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பட்டியல் தவிர்த்தும் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன என்பதே அதிர்ச்சியான விஷயம். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் தற்கொலைகள் குறித்து பலரும் பல கோணங்களில் உரையாற்றினார்கள்; விவாதித்தார்கள்

2019 –ல் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை இத்தனையா?  அதிர்ச்சி டேட்டா

அந்த நிகழ்ச்சியில் பேசிய மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் இரண்டு முக்கியமான தரவுகளைத் தெரிவித்துள்ளார்.

சென்ற (2019) ஆண்டில் இந்தியாவில் மட்டும் 1,39,123 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், அவர்களில் தமிழ் நாட்டில் 13,493 பேரும் புதுச்சேரியில் 493 பேரும் தற்கொலை செய்து கொண்டவர்களில் அடங்குவர் என்று தெரிவித்தார்.

2019 –ல் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை இத்தனையா?  அதிர்ச்சி டேட்டா

இந்த தகவல் கடும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு 13,493 பேர் என்பது மிக அதிகமான எண்ணிக்கை.  இந்த எண்ணிக்கையை ஒரு நாளைக்கு என்று கணக்கிட்டால் 36 க்கும் அதிகமான நபர்கள் என வரும்.

தினந்தோறும் 35க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பது ஆபத்தானது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டியது மிகவும் அவசரமான ஒன்று.