ரஜினி இத்தனை ஆண்டுகள் யோசித்தது இந்த ஒரு காரணத்திற்காகத்தானா?

 

ரஜினி இத்தனை ஆண்டுகள் யோசித்தது இந்த ஒரு காரணத்திற்காகத்தானா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தமிழ்நாட்டு அரசியல் பரப்பில் கடந்த கால் நூற்ராண்டாகப் பேசி வருகிறோம். 1995-ம் ஆண்டு பாட்ஷா வெற்றி விழாவில் அவர் பேசிய நேரடி அரசியல் பேச்சு பல வம்புகளைத் தேடித்தந்தது. அதனால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக – த.மா.கா கூட்டணிக்கு ஆதரவளித்தார்.

1995-லிலிருந்து பார்த்தால் 25 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இப்போதுதான் அதற்கு ஓர் முடிவு கிடைத்திருக்கிறது.

ரஜினி இத்தனை ஆண்டுகள் யோசித்தது இந்த ஒரு காரணத்திற்காகத்தானா?

2017 ஆம் ஆண்டு டிசம்பரில். பேசிய ரஜினி விரைவில் கட்சித் தொடங்குவேன் என்றார். அது தள்ளிக்கொண்டே சென்றது. கொரோனா ஊரடங்கில் அது இன்னும் முடங்கியது. ஒருவழியாக இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அறிக்கை, ஜனவரியில் கட்சி என முடிவெடுத்த ரஜினி, ஹைதராபாத் சூட்டிங்கில் நேரடியாகக் கண்ட காட்சிகள் அரசியலுக்கு முழுக்கு போட வைத்துவிட்டன.

அவர் வெளியிட்ட அறிக்கையில் ’நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினி இத்தனை ஆண்டுகள் யோசித்தது இந்த ஒரு காரணத்திற்காகத்தானா?

பலரும் ரஜினியின் முடிவுகள் குறித்த ப்ளஸ், மைனஸ் பற்றி விவாதிக்கிறார்கள். இதன் இன்னொரு பக்கம் பார்த்தால், ரஜினி ஏன் இந்த முடிவை எடுக்க இத்தனை ஆண்டுகள் எடுத்தார். அவர் முடிவில் தடுமாறுவதுபோல தெரிந்தது உண்மையில் தடுமாற்றமா… இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ரஜினியின் அறிக்கையில் ஓர் இடத்தில், ’இந்த முடிவு ரஜினி மக்கள்‌ மன்றத்தினருக்கும்‌, நான்‌ கட்‌சி ஆரம்பிப்பேன்‌ என்று எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ ரசிகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ ஏமாற்றத்தை அளிக்கும்‌, என்னை மன்னியுங்கள்‌’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினி இத்தனை ஆண்டுகள் யோசித்தது இந்த ஒரு காரணத்திற்காகத்தானா?

கட்சி தொடங்க வில்லை என்று அறிவித்தால் போதுமே ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சிலர் கேட்டார்கள். ரஜினி தம் ரசிகர்களை நன்கு அறிவார். இந்த முடிவால் அவர்கள் கலங்கி விடுவார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.

அப்படி இருந்தும் ஒரு ரசிகர், ரஜினியின் முடிவை ஏற்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். விழுப்புரம், பாணம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ்க்கு மனைவி, குழந்தையைத் தவிக்க விட்டு இறாந்துவிட்டார். ராஜேஷ் மாதிரியான உணர்வுமிக்க அதேநேரம் உணர்வுகளைச் சரியாகக் கையாள தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ரஜினி தம் முடிவை நிதானமாக எடுத்தார்; அறிவித்தார் என்றே கொள்ளலாம்.