தேர்தலில் தோற்ற ட்ரம்ப்க்கு சொந்த வாழ்க்கையிலும் இப்படியொரு அதிர்ச்சியா?

தேர்தலில் தோற்ற ட்ரம்ப்க்கு சொந்த வாழ்க்கையிலும் இப்படியொரு அதிர்ச்சியா?

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடந்தது. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். தேர்தலில் மக்கள் பெருவாரியாக வந்து வாக்களித்தனர்.

அடுத்த நாளே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. ஆனால், பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறி ஏற்பட்டதால், யார் அடுத்த அதிபர் என்பதில் குழப்பம் நீடித்தது.

தேர்தலில் தோற்ற ட்ரம்ப்க்கு சொந்த வாழ்க்கையிலும் இப்படியொரு அதிர்ச்சியா?

சனிக்கிழமை இரவு ஜோ பைடன் அதிபராவதற்கான மெஜாரிட்டான 270 வாக்குகளைக் கடந்தார். அதனால், அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வானார். ட்ரம்ப் இறுதிவரை தேர்தல் குழப்பம், நீதிமன்றம் செல்வேன் என்றெல்லாம் மிரட்டிக்கொண்டிருந்தார்.

அமெரிக்காவில் ஒருவர் அதிபரானால், மறுமுறையும் அவரே வெல்வதே நடந்து வந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறை அதிபராக இருந்து அடுத்த தேர்தலில் தோற்றது ட்ரம்ப்தான். எனவே இந்த தோல்வி அவரை ரொம்பவே உலுக்கி விட்டது. பிரஸ் மீட்டில் கடும்கோபத்துடன் பேசினார்.

தேர்தலில் தோற்ற ட்ரம்ப்க்கு சொந்த வாழ்க்கையிலும் இப்படியொரு அதிர்ச்சியா?

தேர்தல் தோல்வியின் சோகம் தீர்வதற்குள், ட்ரம்பின் சொந்த வாழ்க்கையிலும் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம். ட்ரம்பை அவரின் மனைவி மெலனியா விவகாரத்து செய்யும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ட்ரம்ப், மெலனியாவை 2005 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். ட்ரம்ப்க்கு அதற்கு முன் இருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார். ட்ரம்ப் – மெலனியா ஜோடிக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

தேர்தலில் தோற்ற ட்ரம்ப்க்கு சொந்த வாழ்க்கையிலும் இப்படியொரு அதிர்ச்சியா?

ட்ரம்ப்க்கும் மெலனியாவுக்கும் அடிக்கடி கருத்து மோதல் வரும் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகும். அதற்கு முக்கியக் காரணம் இருவருக்கும் வயது இடைவெளி 24 ஆண்டுகள். இந்நிலையில் தேர்தல் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் ட்ரம்பை விவாகரத்து செய்யும் முடிவை மெலனியா எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.