அமெரிக்கா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா?

 

அமெரிக்கா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 12 லட்சத்து 43 ஆயிரத்து 488 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 69 ஆயிரத்து 319 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 60 லட்சத்து 53 ஆயிரத்து 021 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,39,21,148 பேர்.

அமெரிக்கா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா?

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டறிந்தாக அறிவித்தது. அதன் பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா?

அமெரிக்காவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமனான ஃபைஸரும், பயோஎண்டெக்கும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி நல்ல பலனளிப்பதாகக் கூறப்பட்டது. அதனால், அமெரிக்காவில் மிக விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கொரோனா தடுப்பூசியில் ஒரு சிக்கலும் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஃபைஸர் நிறுவனம் தயாரித்த இந்தத் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் ஆரோக்கியம் அளிக்கும் திறன் கொண்டது என்றாலும், இம்மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் பாதுகாக்க வேண்டுமாம். அப்போதே அதன் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வசதி அமெரிக்காவிலேயே சில மருத்துவமனைகளில்தான் இருக்கிறது. இந்த நிலையில் அந்த நாடு முழுக்க எடுத்துச் செல்வதும், உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு செல்வது கேள்விக் குறியாக இருக்கிறது.