’ஹிர்திக் பாண்டியாவை விட்டால் வேற ஆளே இல்லையா?’ கம்பீர் கேள்வி

 

’ஹிர்திக் பாண்டியாவை விட்டால் வேற ஆளே இல்லையா?’ கம்பீர் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அதன் மீதான விமர்சனம் பல இடங்களிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.

இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாகத் தோற்றது. சேஸிங்தான் என்று தெரிந்தும் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள். பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்பு இருப்பதுபோலவே ஆட வில்லை என்பதே சோகம்.

’ஹிர்திக் பாண்டியாவை விட்டால் வேற ஆளே இல்லையா?’ கம்பீர் கேள்வி

இந்நிலையில் முதல் போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் கோலி, ‘இந்திய அணியில் ஆல்ரவுண்டர் இல்லாதது பெரிய குறை என்றும், ஹிர்திக் பாண்டியா இன்னும் பந்து வீச தயாராக வில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், இரண்டாம் போட்டியில் ஹிர்திக் பாண்டியா உள்பட 7 பேர் பவுலிங் வீசியும் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர், “இந்திய அணியில் ஹிர்திக் பாண்டியாவை விட்டால் வேறு ஆல்ரவுண்டரே இல்லையா?. இல்லையெனில் ஏன் அப்படி ஒரு வீரரை அணியில் சேர்க்க வில்லை. பேட்ஸ்மேன்களில் முதல் ஆறு பேர் பவுலிங் வீசத் தெரியாதவர்களாக இருப்பது இந்திய அணிக்குப் பெரிய பலவீனம்’ என்று தெரிவித்திருக்கிறார்.  

’ஹிர்திக் பாண்டியாவை விட்டால் வேற ஆளே இல்லையா?’ கம்பீர் கேள்வி

மேலும், ‘ரோஹித் ஷர்மா அணிக்குள் வரும்பட்சத்தில் இந்தப் பிரச்சனை தீரும்’ என்றும் தெரிவித்துள்ளார். கேப்டன் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. ஒருவேளை நாளையும் இந்திய அணி தோற்றுவிட்டால் இன்னும் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.