‘வானதி சீனிவாசன் பிரச்சாரத்தால்’ கோவை தெற்கு தொகுதியில் பதற்றமா?!

 

‘வானதி சீனிவாசன் பிரச்சாரத்தால்’ கோவை தெற்கு தொகுதியில் பதற்றமா?!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. அந்த வகையில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடும் வானதி சீனிவாசன், பிரச்சாரத்துக்காக நட்சித்திர பட்டாளத்தையும் பாஜக தலைவர்களையும் களமிறக்கிக் கொண்டிருக்கிறார். அண்மையில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவையில் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்தார்.

‘வானதி சீனிவாசன் பிரச்சாரத்தால்’ கோவை தெற்கு தொகுதியில் பதற்றமா?!

அப்போது, பாஜக உறுப்பினர்கள் டவுன்ஹால் பகுதியில் கடைகளை அடைக்குமாறு கூறியதாகவும் இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் பாஜகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, கோவை தெற்கில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப், வர்த்தகர்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென புகார் அளித்தார். அமைதியாக இருக்கும் கோவையில் தேவையற்ற பிரச்னைகளை தூண்டுவதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

‘வானதி சீனிவாசன் பிரச்சாரத்தால்’ கோவை தெற்கு தொகுதியில் பதற்றமா?!

இந்த நிலையில் அப்துல் வகாப் கொடுத்த புகார் பற்றி விளக்கம் அளித்த வானதி சீனிவாசன், யாரும் பதற்றத்தை உருவாக்கவில்லை. கோவை இதை விட எத்தனையோ பெரிய கலவரங்களை பார்த்திருக்கிறது. பலர் சிறையில் இருக்கிறார்கள். யோகி ஆதித்யநாத் வந்த போது, எங்கே பிரச்னை நடந்தது என முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.