ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டமா?- மத்திய அமைச்சர் பகீர் தகவல்

 

ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டமா?- மத்திய அமைச்சர் பகீர் தகவல்

ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க போவதாகவும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும் 109 இணை பாதைகளில் 151 அதிநவீன ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் அறிமுகம், குறைவான பயண நேரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், மேம்பட்ட பாதுகாப்பு, உலகத் தரம் வாய்ந்த சேவைகள் கிடைக்கும் என ரயில்வே விளக்கமளித்திருந்தது. இதற்கான டெண்டர் நடப்பு ஆண்டு தொடங்கும் என்றும் பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகிய நிறுவனங்கள் ரயில் போக்குவரத்தை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்பட்டன.

ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டமா?- மத்திய அமைச்சர் பகீர் தகவல்

இந்நிலையில் மக்களவை உறுப்பினர் சந்தேஷ்வர் பிரசாத் எழுப்பியிருந்த கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரயில்வே நிலங்களுக்கான குத்தகை உரிமை தனியாருக்கு வழங்கப்படலாம். திருவாரூர் – காரைக்குடி இடையே ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை” என தெரிவித்தார்.