மாணவிக்கு கொரோனா – பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டுகிறதா தமிழக அரசு?

 

மாணவிக்கு கொரோனா – பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டுகிறதா தமிழக அரசு?

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. சமீப நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

இந்திய அளவில் பார்க்கும்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. மார்ச் மாதம் இந்திய அரசு லாக்டெளன் அறிவித்ததும் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு பலமுறை பள்ளி திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டது.
பெற்றோர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது.

மாணவிக்கு கொரோனா – பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டுகிறதா தமிழக அரசு?

அதன் பிறகு ஜனவரி மாதம் 19ஆம் தேதி 11 மற்றும் 12ம் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட முடிவு எடுத்தது அரசு. ஆனாலும் பல கல்வியாளர்கள் இந்த கல்வியாண்டு முழுக்கவே பள்ளியை திறக்க வேண்டாம். பூஜ்ய ஆண்டாக இதை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசு ஜனவரி 19 முதல் பள்ளியை திறந்தாலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. அதன்படி மாஸ்க் அணிவது, கிருமி நாசினி தெளித்து வகுப்பறையைச் சுத்தம் செய்வது, மாணவர்களுக்கு கைகளில் சானிடைசர் தெளிப்பது போன்றவை பின்பற்றப்படுகின்றன.

மாணவிக்கு கொரோனா – பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டுகிறதா தமிழக அரசு?

வகுப்பறைகளில் ஒரு மாணவருக்கும் இன்னொரு மாணவருக்குமான இடைவெளிவிட்டு அமர வைத்தாலும் அவர்கள் வகுப்பறை முடிந்ததும் சகஜமாகப் பழகிக் கொள்வதும், பள்ளியை விட்டுச் செல்கையில் மாஸ்க் அணிவதைப் பின்பற்றுவது இல்லை. இதனால் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் எனப் பலரும் அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சேலம் கிருஷ்ணாபுரம் பள்ளியில் படித்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த நிலையில் அவர் மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்திருக்கிறார். அவருடன் வகுப்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்க்கையில் மற்ற பள்ளிகளிலும் இதே போல் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

மாணவிக்கு கொரோனா – பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டுகிறதா தமிழக அரசு?

நீதிமன்றம் கூட பள்ளியை திறப்பதை தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது. இந்த சேலம் பள்ளியை பள்ளியில் எடுத்துக்கொண்டால் ஒரு மாணவிக்கு இருந்தது இப்பொழுது மற்ற மாணவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதேபோல் ஆந்திராவில் பள்ளிகள் திறந்தபோதும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்றுகள் பரவின.

இன்னும் முழுமையாக தீராத பட்சத்தில் பள்ளி திறப்பது அவசரம் காட்டக் கூடாது என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது. இப்பொழுதுதான் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்து இருக்கிறது. அது கிராமங்களுக்கும் சென்று சேர்ந்து ஓரளவு பெரும்பான்மையான மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு பள்ளி திறப்பது குறித்த முடிவு எடுக்கலாம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இது அரசின் கவனத்திற்கு செல்லுமா… உரியவர்கள் உரிய முடிவை எடுப்பார்களா?