சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியை அரசே ஏற்று நடத்துகிறதா?

 

சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியை அரசே ஏற்று நடத்துகிறதா?

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கினார். பள்ளியில் படிக்கும் போது தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அடுக்கடுக்காக புகார் அளித்தனர். அதனடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல குழுமம் சம்மன் அனுப்பியது.

சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியை அரசே ஏற்று நடத்துகிறதா?

ஆனால், சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகாததால் அவரை பிடிக்க தனிப்படை டேராடூன் விரைந்தது. பின்னர், டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, வழக்கு சிபிசிஐடி வசம் மாறிய நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சுஷில் ஹரி பாபாவின் லீலைகள் அம்பலமானதால் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த மாணவர்களை வேறு பள்ளியில் சேர்த்திடவும் பள்ளியை அரசே ஏற்று நடத்தவும் குழந்தைகள் நலக் குழுமம் வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.