‘ஜெயலலிதா நினைவிடத்தை’… பொதுமக்கள் பார்வையிட அனுமதி?

 

‘ஜெயலலிதா நினைவிடத்தை’… பொதுமக்கள் பார்வையிட அனுமதி?

தமிழகத்தை ஆண்ட மிக மாபெரும் தலைவர்களுள் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ‘அதிமுக’ என்னும் ஒரு மிகப்பெரிய கட்சியை தனி ஆளாக ராணுவக் கட்டுப்பாடுடன் வழி நடத்திச் சென்றார். அவரது ஆளுமைத் திறன், அரசியல் தலைவர்கள் பலரை வாயடைக்கச் செய்தது. ஜெயலலிதாவுக்கு பயப்படாத ஆட்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இரும்பு பெண்மணியாக திகழ்ந்தார். அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

‘ஜெயலலிதா நினைவிடத்தை’… பொதுமக்கள் பார்வையிட அனுமதி?

இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நினைவாக, பல தடைகளை மீறி ரூ.57.8 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் கட்டப்பட்டது. கடந்த ஜனவரி மாதம், இந்த நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மைய பணிகள் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மூடப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

‘ஜெயலலிதா நினைவிடத்தை’… பொதுமக்கள் பார்வையிட அனுமதி?

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.