Home தமிழகம் முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? கனிமொழி எம்.பி. ட்வீட்!

முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? கனிமொழி எம்.பி. ட்வீட்!

உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வம் என்பவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சொத்துத் தகராறு காரணமாக நடந்த இந்த கொலைக்கும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்த நிலையில் அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் காவலரை பணிநீக்கம் செய்யாமலும், கைது செய்யாமலும் இருக்கும் நிலையில் அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதனால் அப்பகுதி மக்கள் செல்வம் உடலை வாங்க மறுத்து போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?” என்று பதிவிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணி அபார வெற்றி – LPL அப்டேட்

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் போலவே இலங்கையில் கடந்த எட்டாண்டுகளாக எல்.பி.எல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப்...

முதல்வர் எடப்பாடியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அரசு

பிரபல ஊடக நிறுவனமான ’இந்தியா டுடே’ வருடம்தோறும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவித்து வருகிறது. தொழில்,...

அழகான இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து… அமைச்சர் தொகுதியில் அரங்கேறும் அடாவடி

இறைபணி என்ற பெயரில் சில முக்கிய கோயில்களுக்கு சிறுமிகளை பொட்டுக்கட்டிவிடும் தேவதாசி முறை ஒருகாலத்தில் இருந்தது. அது இப்போதும் இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. ஆரம்ப...

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சிவன்அருள் தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!