கொரோனா பரிசோதனைக்காக கிரிக்கெட் வாரியம் செலவு செய்ய போவது இத்தனை கோடியா?

 

கொரோனா பரிசோதனைக்காக கிரிக்கெட் வாரியம் செலவு செய்ய போவது இத்தனை கோடியா?

எந்த ஆண்டும் இல்லாத வண்ணம் ஐபிஎல் போட்டிகள் பற்றிய சர்ச்சைகளும் பரபரப்புச் செய்திகளும் குவிந்துவரும் ஆண்டாக இது மாறிவிட்டது.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனைக்காக கிரிக்கெட் வாரியம் செலவு செய்ய போவது இத்தனை கோடியா?

இதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அமீரகத்திற்கு சென்றுவிட்டன. அங்கு சென்று பயிற்சி எடுக்கும் போட்டோக்கள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றன. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என பெரும் சோகமான செய்தியும் வந்தது.

பிசிசிஐ தொடக்கம் முதலே கொரோனா பரிசோதனைகள் செய்வதில் தீவிரமாக இருந்துவருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிற்சிக்கு தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் வரும்போது கொரோனா பரிசோதனைக்குப் பிறகே பயிற்சி எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பரிசோதனைக்காக கிரிக்கெட் வாரியம் செலவு செய்ய போவது இத்தனை கோடியா?

தற்போது ஐக்கிய அமீரகத்தில் உள்ள வீரர்களும் கொரோனா பரிசோதனைக்குப் பிறகே பயிற்சிக்கும் விளையாடவும் அனுமதிக்கப் படவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ முழு மூச்சாக செய்துவருகிறது. கொரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவுகளுக்காக கிரிக்கெட் வாரியம் சார்பில் பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து தரும் வீரர்களின் பாதுகாப்பில் வாரியம் உறுதியாக இருப்பதும், அதற்காக ஐக்கிய அமீரகம் உதவியை நாடியிருப்பதும் நல்ல செய்திகளே.