’கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உற்பத்தி உண்டா?’ ரஷ்ய அதிகாரி விளக்கம்

’கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உற்பத்தி உண்டா?’ ரஷ்ய அதிகாரி விளக்கம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 23 லட்சத்து  07 ஆயிரத்து 265 பேர்.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரத்து 783 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 84 ஆயிரத்து 353 பேர்.

’கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உற்பத்தி உண்டா?’ ரஷ்ய அதிகாரி விளக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை தினந்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளின் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க ஒரே வழி கொரோனா தடுப்பூசிதான் என்பதாகி விட்டது. ஏற்கெனவே ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்துவிட்டதாகப் பதிவு செய்துவிட்டது.

இந்நிலையில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை பல நாடுகளும் தங்கள் நாடுகளில் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அதன் உற்பத்தி இருக்குமா என்பது பலரின் கேள்வி. அதற்கு பதில் அளித்திருக்கிறார் ரஷ்யாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிமிட்ரேவ்.

’கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உற்பத்தி உண்டா?’ ரஷ்ய அதிகாரி விளக்கம்

’ரஷ்யா கண்டறிந்துள்ள ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் மருந்து தயாரிப்பவர்களும் ரஷியாவின் தொழில்நுட்பத்தை நன்கு புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தருகிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

’கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உற்பத்தி உண்டா?’ ரஷ்ய அதிகாரி விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அளவிலான கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நிபுணர் குழுவை அமைத்து அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றும் வருகிறது.

எனவே, ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.