இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறதா?

 

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறதா?

கொரோனா உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் பேரிடராக மாறிவிட்டது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்து 250 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 66 லட்சத்து 23 ஆயிரத்து 510 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 41 ஆயிரத்து 824 பேர்.

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறதா?

இலங்கையில் இன்றைய தேதி வரை கொரொனாவின் மொத்த பாதிப்பு 3,471 பேர். அவர்களில் 3,258 பேர் சிகிச்சை பலனால் குணம் அடைந்துவிட்டனர். 13 பேர் இதுவரை கொரோனாவால் இலங்கையில் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால் இலங்கை அரசு கடும் எச்சரிக்கையோடு இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் செய்கிறது.

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறதா?

ஆயினும் தற்போது இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கம்பஹ மாவட்டத்தில் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்களாம். அதேபோல வடப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்கள் இந்திய மீனவர்களோடு பேசிக்கொண்டிருப்பது போன்ற செயல்களால் வந்திருக்கலாம் என்றும் யூகிக்கிறார்கள். யாழ்ப்பாணம் பகுதியில் 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இந்நிலையால் இலங்கையில் மீண்டும் லாக்டெளன் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இன்னும் அடுத்து வரும் நாட்களில் இருக்கும் சூழலைப் பொறுத்தே லாக்டெளன் தேவைப்படுமா என்பதை முடிவு செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.