சீன அதிபர் தொடர் இருமல் – கொரோனா அறிகுறியா? வலுக்கும் சந்தேகம்!

 

சீன அதிபர் தொடர் இருமல் – கொரோனா அறிகுறியா? வலுக்கும் சந்தேகம்!

சென்ற ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அது நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது. இன்று, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 95 லட்சத்து 87 ஆயிரத்து 475 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 09 ஆயிரத்து 135 பேர்.

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கம் காலத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிகம் ஊடகங்களில் தென்பட வில்லை. அப்போதே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் ரகசிய அறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அவை எவ்வித உறுதியும் செய்யப்படாத செய்திகள். அதன்பின் சில நாட்களில் ஊடகங்களில் பேசினார் ஜின்பிங்.

சீன அதிபர் தொடர் இருமல் – கொரோனா அறிகுறியா? வலுக்கும் சந்தேகம்!

தற்போது, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் அடிக்கடி வந்த இருமலால் தவித்தார். இடையிடையே அவரின் பேச்சு இருமலால் தடைப்பட்டது. இப்படித் தொடர் இருமல் வருவது குறித்து, மீண்டும் சந்தேக வளையம் சீன பிரதமரைச் சுற்றி விழுந்திருக்கிறது.

சீன அதிபர் தொடர் இருமல் – கொரோனா அறிகுறியா? வலுக்கும் சந்தேகம்!
file photo

சீன அதிபர் ஜின்பிங்க்கு கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்று சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்தச் சந்தேகங்களைப் போக்க வேண்டிய பொறுப்பு சீன அரசுக்கு இருக்கிறது. என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.