தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் ரெடியா? தொண்டர்கள் பரபரப்பு

 

தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் ரெடியா? தொண்டர்கள் பரபரப்பு

தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் ரெடியாகிவிட்டதாக தொண்டர்கள் மத்தியில் இப்போதே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம், வேட்பாளர்களை அறிவிக்க திமுக மேலிடம் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளை “தேர்தல் சிறப்புக் குழு” ஒன்று தீவிரமாக செய்து வருகிறது. இந்தக் குழுவினரின் ஆலோசனைப்படி 40 வயது முதல் 45 வயது வரையிலான இளைஞர்களுக்கு முக்கித்துவம் தரலாம் என தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை திமுக மேலிடம் அனுமதிக்கவில்லை.


மாறாக மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள முகங்களுக்கே முக்கித்துவம் தரப்பட வேண்டும். வயது பேதம் பார்க்க வேண்டாம் என மேலிடம் சொல்லி விட்டதாம்.அந்த அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கூட்டணியை பொறுத்த மட்டில் திமுக 184 தொகுதி முதல் 200 தொகுதி வரை தனித்து போட்டியிடுவது என்றும், காங்கிரசுக்கு 15 இடங்கள், ம.தி.மு.க.விற்கு 10 இடங்கள். கம்யூனிஸ்டுகளுக்கு தலா 7 இடங்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8 இடம் என்ற முடிவில் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது. எந்த வகையிலும் திமுக வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்ட தொகுதிகளை கூட்டணியில் வேறு யாருக்கும் தரக்கூடாது எனவும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் ரெடியா? தொண்டர்கள் பரபரப்பு


இதற்கிடையே திமுக போட்டியிடும் தொகுதிகளையும், அதன் வேட்பாளர் களையும் வரையறுத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. 50 சதவீத வேட்பாளர்கள் யாரென்று முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். அதன்படி சென்னை ஆயிரம் விளக்கில் உதயநிதி ஸ்டாலின், ஆர்.கே நகரில் சேகர் பாபு, தி.நகரில் ராஜா அன்பழகன், திருவெறும்பூரில் அன்பில் ரமேஷ்

தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் ரெடியா? தொண்டர்கள் பரபரப்பு

பொய்யாமொழி, மதுரை மத்தியில் பி.டி.ஆர். தியாகராஜன், ஆண்டிப்பட்டியில் தங்க தமிழ் செல்வன், கரூரில் செந்தில் பாலாஜி, ஆலங்குளத்தில் பூங்கோதை ஆலடி அருணா, கடையநல்லூரில் அய்யாத்துரைப்பாண்டியன், தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஜோயல் போன்றவர்களை உறுதிபடச் சொல்கிறார்கள்.
நாகர்கோவிலுக்கு ஆஸ்டின், கன்னியாகுமரிக்கு சுரேஷ்ராஜன் எனக் கட்சி கீழ் மட்டம் வரை தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் திமுக தொண்டர்கள் இப்போதே பரபரப்படைந்துள்ளனர்.
– இர. சுபாஸ் சந்திர போஸ்