கொரோனாவால் தமிழக தேர்தல் ஒத்திவைப்பு?

 

கொரோனாவால் தமிழக தேர்தல் ஒத்திவைப்பு?

இந்தியாவில் படிப்படியாகக் குறைந்துவந்த கொரோனாவின் கொடூர தாக்கம் தற்போது அதே வேகத்துடன் முன்னேறி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, இறப்பு வீதம் திடீரென உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் தமிழக தேர்தல் ஒத்திவைப்பு?

இச்சூழலில் நேற்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்த பின் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்; இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. மேலும் தமிழக தேர்தல் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.

கொரோனாவால் தமிழக தேர்தல் ஒத்திவைப்பு?

தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. இதுதொடர்பாகப் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சட்டப்பேரவை தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பில்லை. பீகார் மாநிலத்தில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆகவே தேவையற்ற வதந்தியை நம்ப வேண்டாம்” என்றார்.