’ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷமா?’ – பெரிய அளவில் வெடிக்கும் சிக்கல்

 

’ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷமா?’ – பெரிய அளவில் வெடிக்கும் சிக்கல்

ரஷ்ய நாட்டின் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவ்லனி. ரஷ்யா ஃபார் த ஃபீச்சர் எனும் அரசியல் கட்சியை உருவாக்கி, அதன் தலைவராக இருக்கும் அலெக்சி நவ்லனிக்கு 44 வயதாகிறது. இக்கட்சியை அவர் ஏழாண்டுகளுக்கு முன் உருவாக்கினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சனம் செய்பவர் அலெக்சி நவ்லனி.  சென்ற தேர்தலில் அவர் வெல்வார் என்றும் சிலரால் கூறப்பட்டது. ஆனால், ரஷ்ய அதிபர் தரப்பில் அலெக்சி நவ்லனி மீது ஊழல் குற்றசாட்டுகள் கூறப்பட்டு, தேர்தலில் நிற்க முடியாத நிலை வந்தது.

’ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷமா?’ – பெரிய அளவில் வெடிக்கும் சிக்கல்
Vladimir Putin Pc: wikkipedia

அலெக்சி நவ்லனி உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர் ஜெர்மனியின் புகழ்பெற்ற மருத்துவமனையில் அவசர நிலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கும்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தரப்பில் கூறப்படுகிறது.

ரஷ்யா அரசு அலெக்சி நவ்லனிக்கு விஷம் வைத்திருக்க வாய்ப்பிருப்பதாக ஜெர்மனி குற்றம் சாட்டியது. ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் கூறுகையில், ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அந்நாட்டின் எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவ்லனிக்கு விஷம் அளித்ததற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது. இந்தப் பிரச்னை குறித்து ரஷ்ய அரசு விளக்கம் கொடுக்காவிட்டால் பொருளாதார தடை குறித்தும் யோசிப்போம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

’ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷமா?’ – பெரிய அளவில் வெடிக்கும் சிக்கல்

ஜெர்மனி தனக்கு ஆதரவாக பல நாடுகளை திரட்டி வருகிறது. அமெரிக்கா ஜெர்மனியுடன் நின்றாலும் விஷம் வைக்கப்பட்டது குறித்து ஆதாரம் தங்களுக்குத் தெரியாது என எச்சரிக்கையோடு பேசி வருகிறது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்த இந்த வேளையில் ரஷ்யாவுக்கு இந்த விவகாரம் பெரும் குடைச்சலைக் கொடுத்து வருகிறது.