ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா செல்வாரா… மாட்டாரா? இறுதி கட்டம்!

 

ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா செல்வாரா… மாட்டாரா? இறுதி கட்டம்!

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தாலும் டி20 தொடரைக் கைப்பற்றி விட்டது. தமிழக வீரர் நடராஜன் எல்லோரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார். அடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி விட்டு, நாடு திரும்புகிறார் கேப்டன் விராட் கோலி. அவர் மனைவியின் பிரசவத்தின்போது உடன் இருக்க வேண்டும் என்று முன்பே விடுமுறை கேட்டிருந்தார்.

ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா செல்வாரா… மாட்டாரா? இறுதி கட்டம்!

அதனால், மற்ற டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆஸ்திரேலியா செல்லும் கிரிக்கெட் அணியில் எதிலும் ரோஹித் ஷர்மா பெயர் இல்லை. அவரின் உடல்நிலையக்க் காரணமாகச் சொல்லப்பட்டது. அதன்பின், அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதைப் பார்த்து, டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மா பெயர் சேர்க்கப்பட்டது.

ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா செல்வாரா… மாட்டாரா? இறுதி கட்டம்!

ஆனபோதும், அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை முன்னாள் வீரர்களும் எழுப்பினர். இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதி சோதனையை நடத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்தச் சோதனையில் ரோஹித் போட்டிகளில் ஆடுவதற்கான உடற்தகுதியோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

எனவே, ரோஹ்த் ஷர்மா விரைவில் ஆஸ்திரேலியா செல்வார் என்று தெரிகிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் அதனை அறிவிக்காத வரை எதுவும் உறுதியில்லை.