பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம்? – சோசியல் மீடியாக்களில் வைரல்!

 

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம்? – சோசியல் மீடியாக்களில் வைரல்!

நவீன உலகத்தில் சமூக வலைதளங்களின் வீச்சை நாம் அனைவரும் அறிந்ததே. நாம் வீட்டிலிருந்தபடியே உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்கிறோம். இதன்மூலம் டிஜிட்டல் நமக்கு வரப்பிரசாதமாகக் காட்சியளிக்கிறது. இது நல்ல விஷயங்களுக்கு மட்டும் தான். இதன் மறுபுறம் கோரமாக இருக்கிறது. ஒரு தவறான செய்தி படு பாதகமான விளைவுகளை நொடிப்பொழுதில் ஏற்படுத்திவருகிறது. அரசுகளால் எவ்வளவு முயன்றும் இதுபோன்று வதந்திகளைப் பரப்புவர்களைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை.

Demonetization or Demonization – 14 days into PM Modi's cashless India – On  The Bog

தற்போது பண மதிப்பிழப்பு குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. பண மதிப்பிழப்பை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். பணத்தை மாற்ற வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் மக்கள் பட்ட துன்பம் சொல்லி மாளாது. 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதைக் குறிப்பிட்ட தேதிக்குள் மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்ததே அதற்குக் காரணம்.

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம்? – சோசியல் மீடியாக்களில் வைரல்!

இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது பரவிக் கொண்டிருக்கும் தகவல் எப்படி இருக்கிறது என்றால், பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள மத்திய அரசு மீண்டும் கால அவகாசம் கொடுத்திருப்பதாகக் கூறுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தான் இந்தச் சேவையை ரிசர்வ் வங்கி அளிப்பதாக அந்த வங்கியின் கடிதம் போலவே இணையத்தில் சுற்றிவருகிறது. ஆனால் இந்தத் தகவல்களில் எதுவும் உண்மை இல்லை. கால அவகாசம் ரிசர்வ் வங்கி வழங்கியது தான். அதை மறுப்பதற்கில்லை. அந்த அவகாசம் எல்லாம் 2017ஆம் ஆண்டோடு முடிவடைந்துவிட்டது. இப்போது இதுபோன்ற எந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. ஆகவே சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் சரி தானா என்று சோதித்துப் பார்த்து பகிருங்கள்.