Home அரசியல் ரஜினி அரசியல் கண்ணாம்பூச்சி ஆடுகிறாரா?

ரஜினி அரசியல் கண்ணாம்பூச்சி ஆடுகிறாரா?

அரசியல் ஆசைக்கு முழுக்கு போடுவார் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி திடுதிப்பென மீண்டும் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுத்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நடக்க உள்ள கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில், ரஜினி கட்சி தொடங்கி போட்டியிடுவார் என அரசியல் கணிப்புகள் வெளியான நிலையில், தனது வயதும் உடல்நிலையும் அரசியலுக்கு ஒத்துவராது என்பதாக ஒரு அறிக்கையை வெளிவந்து ,அதன் பின்னர் அந்த அறிக்கை பொய் , ஆனால் தகவல்கள் உண்மை என்கிற ஸ்டேட்மெண்ட் டை ரஜினி விடுத்திருந்தார். அதில், உண்மை இருந்ததால் , மக்களும் ரசிகர்களும் அந்த கருத்தை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே ஆடிட்டர் குருமூர்த்தி திடீரென ரஜினியை சந்தித்து, அரசியலில் இறங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடமும் தனது அரசியல் நிலையை ரஜினி தெளிவுபடுத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகின.அதன் பின்னர் சற்று ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் ரஜினி அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த அஜெண்டாவை குறித்து வேறு தகவல்கள் வெளியாகாத நிலையில், சில பல அரசியல் அழுத்தங்கள் காரணமாக, தற்போது மீண்டும் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி அரசியலில் இறங்குவது குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அண்ணாத்த பட சூட்டிங்கை டிசம்பருக்குள் முடித்துவிட்டு அரசியலில் இறங்கலாம் என அவருக்கு ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அவரது நலம் விரும்பிகள் உடல்நிலை பாதுகாப்பு கருதி அந்த முடிவை கைவிட கூறியதும் அவர் மனநிலை மாற்றத்திற்கு காரணமாக இருந்தது. ஒருவேளை , நாளை கூட்டத்துக்கு பின்னர், அரசியல் வருகையை அறிவிப்பார் என்றால் அவருக்கான செல்வாக்கு முன்பு போல இருக்குமா என்பது சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக இருப்பாரே தவிர, தனித்து நிற்கும் பட்சத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறும் சக்தி அவரது கட்சிக்கு கிடையாது . ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றாலும், அவரது குரலுக்கும் அப்படியான ஒரு மதிப்பு கொடுக்கும் சாத்தியமான சூழல் தமிழகத்தில் தற்போது இல்லை என்றே சொல்லலாம். ஒருவேளை கட்சி தொடங்கினால், பாஜகவுடன் கூட்டணி வைப்பது அவருக்கான முதல் வாய்ப்பு. அல்லது கமலுடன் கூட்டணி அமைக்கலாம்.
அதையடுத்து, ரஜினி, கமல், காங்கிரஸ், அமமுக என சேரலாம். இப்படியான கூட்டணி வாய்ப்புகள் மட்டுமே ரஜினிக்கு உள்ளது.
இதில் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், ரஜினியின் அரசியல் நோக்கம் கேள்விக்குறியாகும். இந்த விவரங்கள் எல்லாம் ரஜினிக்கும் தெரிந்தும், ஏதோ ஒரு கட்டாயத்திலும் நெருக்கடியிலும் உள்ளதாகவே தெரிகிறது.

தமிழக அரசியலில், ஒவ்வொருமுறையும் கிணற்றுக்குள் ஆழம் பார்ப்பது போல, ரஜினி அரசியல் ஆழம் பார்பதும், அதன்பின்னர் பின்வாங்குவதும் அவர் மீதான பிம்பத்தை சிதைத்து வருகிறது. ரஜினியை கேட்டால் நாளை என்ன நடக்கும் என்பது தனக்கு தெரியாது என்று நழுவி விடுவார் என்பதுதான் இப்போதைய நிலைமை. ரஜினியின் அரசியல் பிம்பம் கேலிக்குரியதாக மாறுவதற்கு முன் தனது நிலையை தெளிவுபடுத்திக் கொள்வது ரஜினிக்கும் நல்லது என்றே அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.. மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. கோரிக்கை

பெண்கள் தினம் கொண்டாடுவது போல் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. சோனல் மான்சிங் கோரிக்கை விடுத்தார்.

9-3-2021 தினப்பலன் – 6 ராசிக்கு நன்மையான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 25 I செவ்வாய்க்கிழமை I மார்ச் 9, 2021 இன்றைய...

கேரளாவில் அதிகபட்சம் 2 தாமரை பூக்கும்.. பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.. கருத்து கணிப்பு

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.. மம்தா பானர்ஜி தாக்கு

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம், அகமதாபாத் மைதானத்துக்கு மோடி பெயர் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்டு, ஒருநாள் இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு...
TopTamilNews