அனைவரது விருப்பப்படி லாக்டவுனை தளர்த்திய மத்திய அரசு…. இனி கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது நம் பொறுப்பு….

அனைவரது விருப்பப்படி லாக்டவுனை தளர்த்திய மத்திய அரசு…. இனி கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது நம் பொறுப்பு….

68 நாட்களாக நீடித்து வரும் நாடு தழுவிய லாக்டவுன் இன்றோடு முடிவடைகிறது. லாக்டவுனை தளர்த்த வேண்டும் என்ற நமது அனைவரது விருப்பத்தையும் பூர்த்தி செய்வது போல் நாளை முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அடுத்த மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இருப்பினும் நாளை முதல், அருகிலுள்ள கடைகள் திறப்பு, மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் சரக்கு மற்றும் தனிநபர்கள் பயணத்துக்கான தடை நீக்கப்படுகிறது.

அனைவரது விருப்பப்படி லாக்டவுனை தளர்த்திய மத்திய அரசு…. இனி கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது நம் பொறுப்பு….

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி இந்த சூழ்நிலையில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இனி கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவரவர் பொறுப்பு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அனைவரது விருப்பப்படி லாக்டவுனை தளர்த்திய மத்திய அரசு…. இனி கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது நம் பொறுப்பு….

அதனால் லாக்டவுன் காலத்தில் வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டமோ அத்தனையும் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து பின்பற்றுங்க. உதாரணமாக தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிருங்க. வீட்டு வெளியே சென்றாலே மாஸ்க் அணிவதே வழக்கமாக்கி கொள்ளுங்கள். பொது இடங்களில் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். வெளியே சென்று வந்தால் சோப்பு அல்லது ஹேண்ட்வாஷ் பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவுங்கள். வீட்டையும், வீட்டு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சொல்லும் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.