அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

 

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

“அ.தி.மு.க.வில் எது நடக்க கூடாது?” எனத் தொண்டர்கள் நினைத்தார்களோ அது நடக்கிறது. எதிர்க்கட்சியினர் என்ன எதிர் பார்த்தார்களோ அது நடக்கிறது.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதா மட்டும் தனக்குப் பின்னால் அரசியல் வாரிசு இவர்தான் என ஒருவரைக் கை காட்டி இருந்தால் அதிமுகவில் இந்த பிரச்னைக்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

அ.தி.மு.க.வில் என்னதான் நடக்கிறது…?

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

இதெல்லாம் சும்மா. ‘ஜூஜூபி’ கலாட்டா என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒன்றுபட்ட அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது யார்? என்று உற்று நோக்கினால் அது ஓ.பி.எஸ்தான் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. “முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இருவரும் பேசி அறிவிப்போம்” என்று ஓபி.எஸ் ஒரு வார்த்தை சொன்னால் போதும் தொண்டர்கள் கப்- சிப் ஆகி விடுவார்கள்.
ஆனால் அவர் அதைச் செய்யாமல் தனது ஆதரவாளர்களைத் தூண்டி விடுவதாகவே தெரிகிறது.

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

அ.தி.மு.க.வின் இத்தகைய சண்டைகளால் கட்சிதான் இரண்டாகப் பிளக்குமே தவிர மக்கள் மத்தியில் ஒட்டுக்களை வாங்கித் தராது. அதே சமயம் திமுகவிற்கு இது மிகப் பெரிய வாய்ப்பாகப் போய் விடும் என்பது தெரிந்தும் ஓபிஎஸ் இந்த வேலையைச் செய்வது ஏன்? என்ற கேள்வியை தொண்டர்கள் கேட்கிறார்கள்.

ஓபிஎஸ்- தினகரன் ரகசிய சந்திப்பு ?

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

இதன் பின்னணியில் பல ரகசியங்கள் இருக்கின்றன. “நான் வரும் வரை கட்சியை இரண்டாக உடைத்து வை, நான் வந்ததும் இருவரையும் பேசி சமாதானம் செய்து எனது தலைமையில் மீண்டும் ஒன்றாகப் பணியாற்றுங்கள்” என்று வந்த தகவல்தான் இந்த திடீர் போர்க்கொடியின் அடிப்படை ‘பார்முலா’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒபிஎஸ், டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தாக கூறுகிறார்கள். அதன் பின்னரே ஒபிஎஸ் இந்த பூர்வாங்க முடிவை எடுத்திருக்கிறார். இந்த விஷயம் முதல்வர் எடப்பாடிக்கும் தெரியும் என்கிறார்கள். அவரை பொறுத்தமட்டில் “எனக்கு கொடுத்த பணியை நான் அம்மா வழியில் மனச்சாட்சியுடன் செய்திருக்கிறேன்”. இதைத் தவிர வேறில்லை. என்ற மன நிலையில் இருக்கிறார்.

வருத்தத்தில் முதலமைச்சர்..

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

இது குறித்து எடப்பாடி பழனிசாமி, தனக்கு நெருக்கமானவர்களிடம் “எனக்கொன்றும் முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை. பேசாமல் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிடலாமா?” என நினைப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்களோ “நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்வது இருக்கட்டும். ஆனால் நடக்க போகிற நிகழ்வுகள் எப்படியிருக்கும்? ஓபிஎஸ் ஒன்றும் மக்கள் செல்வாக்கானவர் அல்ல என்று சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

அவர் முதல்வராக இருந்த நேரத்தில் , தனியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவருக்கென ஒரு சிறிய கூட்டம் இருக்கிறதே தவிர ஒட்டு மொத்த அதிமுகவும் அவர் பக்கம் இல்லை என்று கூறியுள்ளனர். ஒருவேளை அவரே தேர்தலில் தோற்றால், கட்சி நிலமை என்னவாகும்? என்ற பல கேள்விகளை கேட்டுள்ளனர். அதன் பின்னர்தான் இந்த விசயத்தில் பொறுமை காக்க முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி.

அதிமுக கலகங்களுக்கு காரணம் ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பா ?

ஆகவே, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் கொடி பிடிப்பார்கள். பல புதுமைகளைக் கையாண்டு மீடியாக்களின் கவனத்தை கவரும் திட்டமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அன்றய தினம் ஒபிஎஸ் பேசுவார் இபிஎஸ் பேச மாட்டார் என்கிறார்கள். சசிகலா வெளியில் வரும் வரை இந்த யுத்த நாடகம் நடந்து கொண்டுதான் இருக்கும். அதன் பிறகுதான் முடிவுக்கும் வரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

–இர.போஸ்