வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் உயிரோடு இருக்கிறாரா… இல்லையா… தொடரும் சர்ச்சை

 

வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் உயிரோடு இருக்கிறாரா… இல்லையா… தொடரும் சர்ச்சை

அதிரடி நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்றவர் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன். கொரோனா வைரஸ் உலகமெங்கும் தீவிரமாகப் பரவிய நிலையில் கிம் ஜங் எங்கும் காணவில்லை என்று செய்திகள் வெளியானது. திடீரென்று அவரின் போட்டோக்கள் வெளியாயின.

ஆயினும் அவர் கடந்த சில மாதங்களாக கிம் ஜங் உன் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகவில்லை என்பதால், அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா இருப்பதாக செய்திகள் மீண்டும் உலா வந்தன. இந்தச் செய்தியை கி, ஜங் உன்னின் நெருங்கிய நட்பு வட்டமும் உறுதி செய்தி செய்தது. ஆனால், மீண்டும் அவர் இயல்பாக இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாயின.

வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் உயிரோடு இருக்கிறாரா… இல்லையா… தொடரும் சர்ச்சை
Kim Jong-un  PC: twitter

கிம் ஜங் உன் இறந்துவிட்டார் என்று செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் இதில் உண்மை இருக்கும் என அடித்துச் சொல்கிறார். வட கொரிய அதிபருக்கு கடுமையாக உடல்நலம் இல்லாத சூழலில்தான் அதிகாரங்கள் கைமாற்றப்படும்.

சில மாதங்களுக்கு முன் வட கொரிய அதிரிபரின் அதிகாரங்கள் பலவற்றை அவரின் சகோதரி கிம்யோ ஜாங் -க்கு மாற்றியதை வைத்து அந்தப் பத்திரிகையாளர் கிம் ஜங் உன் இறந்துவிட்டார் என்ற முடிவுக்கு வருகிறார்.

வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் உயிரோடு இருக்கிறாரா… இல்லையா… தொடரும் சர்ச்சை
Kim Jong-un  PC: twitter

கிம் ஜங் உன் இறந்துவிட்டார், அவரின் மனைவி வடகொரிய அதிபராகிறார் என்ற செய்திகளும் ஒரு பக்கம் உலவி வருகின்றன. ஆனால், தற்போதும் கிம் ஜங் உன் உற்சாகமாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சை கிளம்பும்போதெல்லாம் போட்டோக்கள் வெளியாவது சந்தேகத்தையே உருவாக்குகின்றன. ஏனெனில், அந்தப் போட்டோக்கள் எப்போது எடுக்கப்பட்டன என்ற தகவல்களும் அதில் இல்லை. ஒருவேளை முன்னர் எடுக்கப்பட்டவையாக இருக்கக்கூடும் என்றும் கருதுகின்றனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் உயிரோடு இருக்கிறாரா… இல்லையா… தொடரும் சர்ச்சை
Kim Jong-un  PC: twitter

உயிரோடு இருக்கிறார்… கோமாவில் இருக்கிறார்… இறந்தே விட்டார் போன்ற செய்திகளில் எது உண்மை என்பதை அந்த நாட்டு அரசுதான் தெளிவாக விளக்க வேண்டும்.