அதானி,அம்பானிக்கு மோடி தான் உதவுகிறாரா? அலப்பறைக்கு எஸ்.வி.சேகர் விளாசல்

 

அதானி,அம்பானிக்கு மோடி தான் உதவுகிறாரா? அலப்பறைக்கு எஸ்.வி.சேகர் விளாசல்

அதானி, அம்பானி குடும்பத்துக்காகத்தான் மோடியின் ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழகத்தில் உள்ள சில கட்சி பிரமுகர்கள் சொல்லி வருகின்றனர். அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் ஒலிபெருக்கியாக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சாதாரண மக்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை. மக்கள் பணத்தை பிடுங்கி நாட்டின் பெரும் பணக்கார்கள் 15 பேருக்கு கொடுக்கிறா்கள் என்றும் ராகுல் சொல்லியிருந்தார்.

அதானி,அம்பானிக்கு மோடி தான் உதவுகிறாரா? அலப்பறைக்கு எஸ்.வி.சேகர் விளாசல்

தமிழக காங்கிரசாரும் அதானி, அம்பானிக்காகத்தான் மோடி இருக்கிறார் என்றே தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மத்தியில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களுடைய நினைவெல்லாம் அதானி – அம்பானிதான் என்று திமுகவும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றது. திமுக, காங்கிரசார் மட்டுமல்லாது தமிழகத்தில் மேலும் பல கட்சியினரும் இதே விமர்சனத்தை முன்வைத்து வருவதால், பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், அதானி – அம்பானிக்கு உதவியது காங்கிரஸ்தான் என்றும், அதற்கான ஆதாரங்களை கேள்வி -பதில் வடிவிலும் தந்திருக்கிறார்.

அதானி,அம்பானிக்கு மோடி தான் உதவுகிறாரா? அலப்பறைக்கு எஸ்.வி.சேகர் விளாசல்
  1. கேள்வி: அதானிக்கு பாம் ஆயில் லைசென்ஸ் கொடுத்தது யார்.?

பதில்: ராஜீவ் காந்தி- காங்கிரஸ், வருடம் – 1989.

  1. கேள்வி: அதானிக்கு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் / கடல் வர்த்தகத்தை யார் வழங்கியது.?

பதில்: நரசிம்மராவ் – காங்கிரஸ், வருடம் – 1993

அதானி,அம்பானிக்கு மோடி தான் உதவுகிறாரா? அலப்பறைக்கு எஸ்.வி.சேகர் விளாசல்

3.கேள்வி : அம்பானிக்கு ரிலையன்ஸ் ரீட்டைல் லைசென்ஸ் கொடுத்தது யார்.?

பதில்: மன்மோகன் சிங் – காங்கிரஸ், வருடம் – 2005

  1. கேள்வி: அம்பானிக்கு 4G லைசென்ஸ் கொடுத்தது யார்.?

பதில்: மன்மோகன் சிங் – காங்கிரஸ், வருடம் – 2013

  1. கேள்வி: அம்பானிக்கு 11 க்கு 11 நெடுஞ்சாலை காண்டிராக்ட்களையும் வழங்கியது யார்.?
    பதில்: டி.ஆர். பாலு – திமுக / காங்கிரஸ் வருடம் ,2009 முதல் 2013
  2. கேள்வி: அதானிக்கு கேரளா விழிஞ்சம் துறைமுகத்தை வழங்கியது யார்.?

பதில்: மன்மோகன் சிங் 2013-2014, மாநில அரசு கம்யூனிஸ்ட் அரசு.

அதானி,அம்பானிக்கு மோடி தான் உதவுகிறாரா? அலப்பறைக்கு எஸ்.வி.சேகர் விளாசல்

7.கேள்வி: அதானிக்கு 6100 மெகா வாட் பவர் plant வழங்கியது யார்.?

பதில்: அமரிந்தர்சிங் – பஞ்சாப் முதல்வர் – காங்கிரஸ் வருடம், நவம்பர் 2020.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அலப்பரை கட்சிகள் அதானி அம்பானிக்கு மோடி தான் உதவுகிறார் என்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என்கிறார் எஸ்.வி.சேகர்.