அமைச்சர் கே.சி.வீரமணி பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கம்?

 

அமைச்சர் கே.சி.வீரமணி பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கம்?

ஜோலார்பேட்டை தொகுதியின் வேட்பாளர் பட்டியலிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நிலத்தகராறு: அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி  அவசியமில்லை - ஐகோர்ட் அதிரடி!

வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், அவரது மனைவி மேகலையின் வருமான வரி கணக்கு எண்ணை தவறாக குறிப்பிட்டு உள்ளதுடன், பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் மார்ச் 20ஆம் தேதி புகார் அளித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் கே.சி.வீரமணி பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கம்?

ஆனால் தன் ஆட்சேபனை மனுவை நிராகரித்திவிட்டு, அமைச்சர் வீரமணியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே அமைச்சரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமெனவும், தகுதியான வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

அமைச்சர் கே.சி.வீரமணி பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கம்?

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனு நிராகரிப்பு மற்றும் திரும்பப் பெறும் கால அவகாசம் முடிந்து, இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தேர்தல் வழக்காக தொடர அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.