“ஏண்டா ஊரடங்கு நேரத்துல ஊதாரித்தனமா செலவு பண்ணே ?”-சிக்கிய தொழிலாளியை, தாக்கிய முதலாளி ..

“ஏண்டா ஊரடங்கு நேரத்துல ஊதாரித்தனமா செலவு பண்ணே ?”-சிக்கிய தொழிலாளியை, தாக்கிய முதலாளி ..

மகாராஷ்டிராவின் புனேவின் கோத்ருட் என்ற இடத்தில் 30 வயது நபர் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் .அவர் நிறுவன வேலை விஷயமாக டெல்லிக்கு போனபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதம் அங்கு சிக்கிக்கொண்டு ஊருக்கு திரும்ப முடியாமல் மாட்டிக்கொண்டார் .

“ஏண்டா ஊரடங்கு நேரத்துல ஊதாரித்தனமா செலவு பண்ணே ?”-சிக்கிய தொழிலாளியை, தாக்கிய முதலாளி ..

அந்த நேரத்தில் கம்பெனி பணம் அவர் கையிலிருந்ததால் அந்த பணத்தை வைத்து மூன்று மாதங்கள் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார் .மே மாதம் அவர் புனேவுக்கு திரும்பியதும் மீண்டும் ஒரு ஹோட்டலில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார் .அப்போது அவர் கையில் பணம் இல்லாததால் அவரின் மோதிரம் ,க்ரெடிட் கார்டைக்கொண்டு சமாளித்தார் ,மீண்டும் வேலைக்கு வந்த அவரை முதலாளி எங்கே கம்பெனி பணம் என்று கேட்டபோது மூன்று மாதம் டெல்லியில் ஊரடங்கு நேரத்தில் தங்கி செலவாகிவிட்டது என்று அவர் கூறியதை நம்பாத பாஸ், மேலும் மூன்று பேரருடன் சேர்ந்து அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர் ,அவரின் அந்தரங்க இடத்தில் சானிடைசரை ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர் .

“ஏண்டா ஊரடங்கு நேரத்துல ஊதாரித்தனமா செலவு பண்ணே ?”-சிக்கிய தொழிலாளியை, தாக்கிய முதலாளி ..
அதற்கு பிறகு அங்கிருந்து விடுவிக்கப்பட்ட அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுவிட்டு , போலீசில் வியாழக்கிழமை அவரின் முதலாளி மீது புகார் கொடுத்தார் .அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .