மாஸ்க் போடாம வெளியே வந்தா இப்படி ஒரு தண்டனையா?

 

மாஸ்க் போடாம வெளியே வந்தா இப்படி ஒரு தண்டனையா?

கொரோனா எனும் ஒற்றை வார்த்தையைக் கண்டுதான் உலகமே பயப்பட்டுக்கொண்டே இருக்கிறது. உலக வல்லரசுகளில் பெரிய அண்ணன் என்றழைக்கப்படும் அமெரிக்காவில் தினமும் ஒன்றரை லெட்சம் பேர் புதிய நோயாளிகளாக உறுதி செய்யப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 7 லட்சத்து  20 ஆயிரத்து 501 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 20 லட்சத்து 31ஆயிரத்து 578 நபர்கள்.

மாஸ்க் போடாம வெளியே வந்தா இப்படி ஒரு தண்டனையா?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 02 ஆயிரத்து 028 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,72,62,089 பேர்.

இந்தியாவில் சற்று குறைவதுபோல தோன்றினாலும், ஒரு கட்டத்தில் அப்படியே தேங்கி இருக்கிறது. தினமும் 90 ஆயிரம் எனும் அளவில் அதிகரித்தது படிப்படியாகக் குறைந்து 45 ஆயிரத்தில் நிற்கிறது. அங்கிருந்து குறையவில்லை.

மாஸ்க் போடாம வெளியே வந்தா இப்படி ஒரு தண்டனையா?

டெல்லியில் தொடக்கத்தில் பெருமளவு கொரோனா அதிகரித்தாலும், ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகளவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால், அங்கே கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது கெஜ்ரிவால் அரசு.

தற்போது ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. அதில் சொல்லப்பட்டிருக்கும் இடம் டெல்லி. ஆனால், காவல் துறை வண்டி பதிவு எண் மத்த்ய பிரதேசம் எனக் காட்டுகிறது. ஒருவேளை மத்திய பிரதேசமாகவும் இருக்கலாம். அங்கே மாஸ்க் அணியாமல் வெளியே  சுற்றுபவர்களைப் பிடித்து கட்டாயமாக குறைந்து 10 மணி நேரம் சிறையில் அடைக்கிறார்களாம். இந்த வீடியோவிலும் ஒருவரைப் பிடிக்க அவர் நழுவி நழுவி கெஞ்சுகிறார்.

இந்த நடைமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. ஆனால், இப்படியும் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.