சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்புள்ளதா? – அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

 

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்புள்ளதா? – அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக பதவியேற்க வருந்த சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற நிலையில், சசிகலாவுக்கே அதிமுகவில் இடமில்லை; அவர் ஒருநாளும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என சசிகலாவுக்கே ஆப்பு அடித்திருக்கிறது அதிமுக அரசு.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்புள்ளதா? – அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன் சசிகலாவை வெளியே எடுக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக, கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே, உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா தற்போது பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி எதிர்க்கட்சிகள் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் பூகம்பம் வெடிக்கும் என்பது தான். ஆனால், அதிமுகவினரோ சசிகலா வந்தால் அதிமுகவில் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டை அதிமுக. சசிகலாவையும் அவரை சேர்ந்தவர்களையும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்று திட்டவட்டமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அதிமுக கூட்டணிக்கு சில கட்சிகள் வர வாய்ப்பிருப்பதாக தெரிவித்த அவர், பாமக உடன் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.