தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடத்தலாமா? இன்று முக்கிய முடிவு!

 

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடத்தலாமா? இன்று முக்கிய முடிவு!

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவதா என்பது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் சிபிஎஸ்இ 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து சமீபத்தில் முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடத்தலாமா? இன்று முக்கிய முடிவு!

இந்த ஆலோசனையில் இரண்டு நாட்களுக்கு பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அத்துடன் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60% பேர் தேர்வு நடத்தலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடத்தலாமா? இன்று முக்கிய முடிவு!

இந்நிலையில் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.அத்துடன் பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கவுள்ள நிலையில் அது இன்று உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.