பூஜை அறையில் விக்கிரகங்களை வைத்து வணங்கலாமா?

 

பூஜை அறையில் விக்கிரகங்களை வைத்து வணங்கலாமா?

வீடுகளில் விக்கிரகங்களை வைத்து வணங்குவது தவறு என சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்லவில்லை. ஆனால் அந்த விக்கிரகங்களுக்கு உண்டான இறை சக்தியை அளிக்க எல்லா பூஜைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே விக்கிரகம் வைத்து வணங்க வேண்டும்.

பூஜை அறையில் விக்கிரகங்களை வைத்து வணங்கலாமா?

விக்கிரகங்களை பொறுத்தவரை, உருவங்களை பார்த்து வாங்க வேண்டும். விக்கிரகத்தின் கை, கால், மூக்கு போன்ற உடல் அமைப்புகளை பார்க்க வேண்டும். அச்சு முறையில் தயார் செய்யப்படும் விக்கிரகங்களில் எல்லா விரல்களும் சரியாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். மூன்று விக்கிரகங்களை வைத்து வணங்கினால் வீட்டில் கஷ்டம் வரும்.

பூஜை அறையில் விக்கிரகங்களை வைத்து வணங்கலாமா?

சிவபெருமானை பொதுவாக லிங்க வடிவில் வழிபடுவது நமது மரபு. வீட்டில், ஒரு ஜான் அளவு அதற்கு மேல் இல்லாத பானலிங்கம், சிவலிங்கத்தை வழிபடலாம். ஒரு ஜான் என்பது கட்டை விரல் அளவு மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் தெரிவிக்கிறது.

மிக முக்கியமானது காமாட்சி அம்பாள் தான். எல்லா சுவாமி படங்களையும் வைத்து நடுவில் காமாட்சி அம்பாளை வைக்க வேண்டும். இப்பவெல்லாம், காமாட்சி அம்பாள் மட்டும் தனியாக கிடைப்பதில்லை. அஷ்டலட்சுமி படம் நிறைய கிடைக்கிறது. அஷ்டலட்சுமி, காமாட்சி அம்பாள் இருந்தால் இன்னும் நல்லது. ஏனென்றால், அந்த அம்பிகையின் அவதாரமே காமாட்சி. காமாட்சி என்றாலே வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குல தெய்வத்தோடு சக்தியும் அந்த அம்பிகையோடதுதான். அஷ்டலட்சுமி வீட்டில் சகல சம்பத்களோடு இருக்க தீபம் ஏற்றுவார்கள்.

பூஜை அறையில் விக்கிரகங்களை வைத்து வணங்கலாமா?

ஒரே இடத்தில் , ஒரே தெய்வத்தின் இரண்டு விக்கிரகங்கள் வைக்கக் கூடாது. புதிதாக விக்கிரகம் வாங்கி வந்ததும் மூன்று நாள் மஞ்சள் நீரில் இருக்க வேண்டும். நான்காவது நாள் எடுத்து அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மகாலட்சுமி விக்கிரகம் என்றால் பூஜை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

எந்த சாமி படமோ, விக்கிரகமோ புதிதாக வாங்கினால் வீட்டில் 21 நாட்களில் ஏதாவது பிரச்னை நடக்கிறதா? எப்படி இருக்கு? மாற்றம் இருக்கா? பணம் செலவாகுதா? அந்தமாதிரி பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும். கஷ்டம் இழப்போ வந்தால் அந்த விக்கிரகத்தை கோயிலிலோ, கடலிலோ, ஆற்றிலோ போட்டு விடலாம்.

பூஜை அறையில் விக்கிரகங்களை வைத்து வணங்கலாமா?

நிறைய பேர், ஸ்ரீ சக்ரம், விக்கிரகம் வாங்கிக்கிட்டு வருவார்கள். அதற்கு உண்டான சக்திகளை 21 நாட்களில் இருந்து மூன்றுமாதம் வரை வைத்து பார்க்கலாம். அதைதொடர்ந்து, கஷ்டங்கள் ஏதாவது வந்தால் அந்த விக்கிரகம் சரியாக அமையவில்லை என புரிந்து கொள்ள வேண்டும். இதேபோன்று புது விக்கிரம் உருவம் பார்த்து வணங்கி பாருங்கள். சில உருவங்கள் சரியாக அமையாது. அம்பாளின் கண், கால், கை, மூக்கு இதெல்லாம் பார்த்து வாங்க வேண்டும். உருவங்கள் நன்றாக அமைந்திருந்தால், உங்கள் உள்ளமும், இல்லமும் நலம் பெறும் !