குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

 

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

கொரோனா காலத்தில் பெற்றோருக்கு இரண்டு கடும் பிரச்னைகள். ஒன்று வெளியில் சென்று பொருட்களை வாங்கச் செல்வது. ஏனெனில், அப்படிச் செல்லும்போது கொரோனா நோய்க் கிருமிகள் அவர்களைத் தொற்றிவிடக்கூடாது என்ற கவலை. அடுத்த பிரச்னை… கட்டாய விடுமுறையாகி விட்ட இந்தக் காலத்தில் குழந்தைகளைச் சமாளிப்பது.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் எனில், பிரச்னையின் அழுத்தம் இன்னும் கூடுதலாகி விடும்.

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

’முன்பெல்லாம் எப்போ பார்த்தாலும் டிவி பார்த்துகிட்டேயே இருக்கியே… கொஞ்சம் நேரம் புக்ஸ் படியேன்’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்வார்கள்.

இப்போதெல்லாம்  ’எப்போ பார்த்தாலும் மொபைல் பார்த்துகிட்டேயே இருக்கியே… கொஞ்சம் நேரம் டிவி பாரேன்’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்கிறார்கள்.

பெரியவர்களே ஏதேனும் வேலையின் நடுவே குழந்தைகள் குறுக்கிட்டால் மொபைலைக் கொடுத்து படம் பார்க்கச் சொல்கிறார்கள். சிறிதுநேரம் கழித்து மொபைலை ரொம்ப நேரம் பார்த்தால் கண்களுக்கு ஆபத்து என நினைக்கிறார்கள். அதனால் உடனே போனைப் பிடிங்கி டிவியை ஆன் செய்துகொடுக்கிறார்கள்.

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

ஆக, மொபைலை விட டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள். இது சரிதானா…

கறுப்பா… வெள்ளையா? என்று சொல்வதுபோல இந்த விஷயத்தில் சரி அல்லது தவறு என்று சொல்லிவிட முடியாது.

மொபைல் சிக்கல்கள்

மொபைலைக் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனால் கண்கள் மிக விரைவில் சோர்ந்துவிடுகின்றன. மேலும், அக்கம் பக்கம் திரும்பக்கூட இல்லாமல் இமைக்காது மொபைலைப் பார்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடல் சார்ந்த சிக்கல்களோடு மனரீதியான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

மொபைலில் இண்டர்நெட் கனெக்‌ஷன் இருப்பதால் குழந்தைகளின் வயதுக்கு மீறிய காட்சிகளைக் காணும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மற்றவர்களோடு சாட் பண்ணும் வசதியும் இருக்கிறது.

ஆக, மொபைலைக் குழந்தைகள் பயன்படுத்துவதால் அடிப்படையாக இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்குப் பதிலாக, டிவி எனும்போது எதெல்லாம் இவற்றில் குறைகிறது.

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

டிவி சிக்கல்கள்

டிவிக்கும் குழந்தைக்குமான இடைவெளியை நாம் தீர்மானிக முடியும். ஆயினும் டிவி திரையின் அளவும் மொபைல் திரையின் அளவையும் ஒப்பிட்டுக்கொள்வது நல்லது. அதனால், மருத்துவர்கள் வலியுறுத்தும் விதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார வைத்து விடலாம்.

அடுத்து, இண்டர்நெட். டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பதால் வயதுக்கு மீறிய காட்சிகள் வருவதற்கு வாய்ப்பில்லை. இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்று, இப்போது பல வீடுகளில் டிவியிலும் இணைய வசதி இருக்கிறது. அது துண்டிக்கப்பட்டிருக்கிறதா என செக் பண்ண வேண்டும். அடுத்து, டிவியில் போன் பண்ணச் சொல்லி, மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் விளம்பரங்களைப் பார்த்து அவ்வாறு உங்கள் குழந்தை செய்கிறாரா என்பதைப் பார்ப்பது.

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

என்னதான் செய்வது?

சரி… அப்படியெனில் மொபைலை விட டிவி பார்ப்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்திவிடலாமா…

அப்படி முழு முடிவுக்கு வந்துவிட முடியாது என்றாலும் முதல் தீமையின் அளவை விட சற்று இது குறைவு என்கிற மாதிரி ஒரு முடிவுக்கு வரலாம்.

டிவியில் கார்ட்டூன் சேனலில் நிகழ்ச்சிகள் பார்ப்பது, உங்கள் குழந்தையின் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்காது. இன்னும் சொல்லப்போனால் இருக்கும் கற்பனை திறனை வற்றச் செய்யும். ஏனெனில், அங்கு உங்கள் குழந்தைக்கு காண்பதற்கு மட்டுமே அனுமதி. சிந்திப்பதற்கு வேலையே இல்லை.

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது. மேலும், நொறுக்குத் தீனி சாப்பிட்டிக்கொண்டே டிவி பார்க்கும்போது ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது குறைந்துவிடும். அதனால் உடல் ஆரோக்கியம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

சரி… என்னதான் செய்வது? முடிந்தளவு டிவி, மொபைல் நினைப்பு வராமல் விளையாடுவதற்கான பொருள்கள் வாங்கிக்கொடுங்கள். மேலும் கதை புத்தகங்கள், நல்ல பாடல்கள் கேட்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். கொரோனா கால பிரச்னைகள் முடிந்ததும் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடப் பழக்கலாம்.