ஜோ பைடன் அமைச்சரவையில் இந்திரா நூயிக்கு முக்கிய இடமா?

 

ஜோ பைடன் அமைச்சரவையில் இந்திரா நூயிக்கு முக்கிய இடமா?

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் இழுபறி இன்றும் நீடிக்கிறது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்ட்டினார். ஓரிரு நாள் இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார். ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் தகர்க்கப்பட்டு 306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன்.

ஜோ பைடன் அமைச்சரவையில் இந்திரா நூயிக்கு முக்கிய இடமா?
joe biden

ஜோ பைடனின் அதிபரானால் இந்தியர்களுக்கு சலுகை கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதன் முதல் வெற்றி, இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸ் துணை அதிபராகியுள்ளார். மேலும், பைடன் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவக்குழு ஒன்றை அமைத்தார். மேலும், அதிகாரத்தை ட்ரம்ப் வசமிடருந்து கைமாற்றவும் குழுக்கள் அமைத்திருக்கிறார். இந்தக் குழுக்களில் இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது தெரிந்த செய்தியே.

ஜோ பைடன் அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஹூம் தார் ஆகிய இரண்டு இந்தியர்கள் இடம்பிடிப்பார்கள் என்று பேச்சு அடிப்பட்டது. தற்போது இன்னொரு முக்கியத் தகவலாக, சென்னையில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் இந்திரா நூயிக்கும் வர்த்தக் அமைச்சர் பதவியை ஜோ பைடன் தர முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருக்கிறது.

ஜோ பைடன் அமைச்சரவையில் இந்திரா நூயிக்கு முக்கிய இடமா?

சென்னையில் பிறந்த இந்திரா நூயி, மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ் மற்றும் கொல்கத்தாவிலும் படித்தவர். பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர். பெப்சியின் முதல் பெண் சி.இ.ஒ இந்தியா நூயிதான் என்பது பெருமையே.

வர்த்தகத் துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த இந்திரா நூயி, அமெரிக்காவின் வர்த்தக அமைச்சராகுவாரா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.