இந்தியாவிற்கு நல்ல நண்பனா..?அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன்

 

இந்தியாவிற்கு நல்ல நண்பனா..?அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன்

By subas Chandra bose
அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜோசப் ராபினெட் பிடன் என்ற ஜோ பிடன் தேர்வாகி இருக்கிறார். அவருடன் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.பி.,யான கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வாகியுள்ளார். இருவரும், வரும், ஜனவரி 20-ல் பதவியேற்க உள்ளனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் இந்தியாவோடு நல்லுறவாக இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரும்பாலும் ஜோ பிடன் இந்தியாவிற்கு மிக நல்ல நண்பராகவே இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.தேர்தலுக்கு முன்னதாவே அவர் வெளியிட்ட பிரசாரக் குழு கொள்கை விளக்க ஆவணத்தில் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்’விசா

இந்தியாவிற்கு நல்ல நண்பனா..?அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன்

நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகளில் சீர்திருத்தம் செய்வது உட்பட, பல சலுகைகளை அறிவித்திருந்தார். இதன்படி, ‘அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும், 5 லட்சம் இந்தியர் உட்பட, 1.1 கோடி வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்க, பிடன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்’ என, நம்பப்படுகிறது.இது இந்தியர்களுக்கு சாதகமாக இருக்கும்.
முன்னதாக அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோ பிடன் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு நல்ல நண்பனா..?அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன்

இதுதவிர, அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் இந்தியர்களுக்கான, ‘விசா’ நடைமுறைக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பல சலுகைகளை அறிவிக்கவும், ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது மட்டுல்ல அவர்ருடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றவ கமால ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..இது பற்றி ஜோ பிடன் கூறும் போது “கமலா ஹாரிசுடன் இணைந்து பணியாற்ற உள்ளது, மிகவும் பெருமையாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவிற்கு நல்ல நண்பனா..?அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன்


ஜோ பிடன் இந்தத் தேர்தளைச் சந்திப்பதற்கு முன்னரே பல கால கட்டங்களில் இந்தியாவிற்காக குரல் கொடுத்தவர் ஆவார்.ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, ஜோ பிடென் இந்தியாவுடன் ஒரு வலுவான உறவை ஆதரித்தார். 2006-லேயே அவர் “2020-ல் உலகில் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இந்தியா- அமெரிக்கா விளங்கும் என்ற கனவை நான் கொண்டுள்ளேன்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவில் ஜோ பிடன் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு அப்போதைய அமெரிக்கா செனட்டர் ஒபாமா ஆதரவு கொடுக்க தயங்கிய நிலையில், பிடென் இந்த ஒப்பந்தத்தை முன்னேடுத்தார். அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினார்.
இந்தியா -அமெரிக்க இடையிலான நட்புறவை வலுப்படுத்த குரல் கொடுத்தவர்களில் ஜோ பிடனும் ஒருவர். அந்த நேரத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியா அரசின் நீண்ட நாள் கோரிக்கை ஜோ பிடன் துணை அதிபராக இருந்த காலத்தில்தான் நிறைவேறியது.

இந்தியாவிற்கு நல்ல நண்பனா..?அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன்


ஒபாமா-பிடன் நிர்வாகம் தான் மாபெரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு என்ற அந்தஸ்த்தை இந்தியாவுக்கு வழங்கியது. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு இந்த அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.இதே போல் “தெற்காசியாவில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மீது சகிப்புத்தன்மை அற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஜோ பிடன் தனது தேர்தல் அறிக்கையில் குறிபிட்டார். எனவே எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சனைகளில் அமெரிக்காவின் பாரம்பரிய மரபுகள் அடிப்படையில் செயல்படுவார் என்று டெல்லி மேலிடம் நம்புகிறது.

இந்தியாவிற்கு நல்ல நண்பனா..?அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன்


“உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் இந்தியாவும் : சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், சம நீதி, கருத்து சுதந்திரம், மத சுதந்திரம் போன்ற ஜனநாயக மாண்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த முக்கிய கோட்பாடுகள் நம் ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளிலும் நீடித்திருக்கின்றன, நமது எதிர்காலத்தில் வலிமையின் ஆதாரமாகவும் இது இருக்கும் ”என்று பைடனின் பிரச்சார ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.எனவே, ஜோ பிடன் இந்தியாவுடனான நட்புறவில் தனிமுத்திரை பதிப்பார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.