திமுகவின் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்பது அரசியலா? பாஜக – மார்க்சிஸ்ட் மோதல்

திமுகவின் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்பது அரசியலா? பாஜக – மார்க்சிஸ்ட் மோதல்

தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இது அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார். அவர் மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் 47 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் பலகைகள் வைக்க இருக்கிறோம்.

திமுகவின் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்பது அரசியலா? பாஜக – மார்க்சிஸ்ட் மோதல்

முதற்கட்டமாக வரும் வாரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட இருக்கிறது. அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியில் தகவல் பலகையில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம் என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்பது அரசியலா? பாஜக – மார்க்சிஸ்ட் மோதல்

தமிழில் அர்ச்சனை செய்யும் முறை தற்போது பெரிய கோவில்களிலும் இதையடுத்து சிறிய கோவில்களிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது என்றும், அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களை முறைப்படுத்தி, முறையாக பயன்படுத்தி அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திமுகவின் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்பது அரசியலா? பாஜக – மார்க்சிஸ்ட் மோதல்

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘’கோயில்களில் தமிழ் வழிபாடு – தேவாரம் திருவாசகம் – பிரபந்தம் உள்ளது. திமுகவின் தமிழில் அர்ச்சனை என்பது அரசியல் – திமுக தலைவர்கள் தமிழ் மாதம், தேதியில் பிறந்தநாள் கொண்டாடுவார்களா? கிறிஸ்தவ, முஸ்லிம்களை மசூதி, சர்ச்களில் தமிழில் ஓதி அர்ச்சிக்க சொல்லமுடியுமா? ’’என்று கேட்கிறார்.

திமுகவின் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்பது அரசியலா? பாஜக – மார்க்சிஸ்ட் மோதல்

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன், ‘’தமிழில் அரச்சனை ஏற்கெனவே இருக்கிறது என்கிறார்கள் சங்கிகள். ஏற்கெனவே இருக்கிறது என்றால் அதை அரசு உறுதி செய்தால் ஏன் புலம்ப வேண்டும்? இதிலிருந்தே அது பேருக்குதான் இருந்தது இப்போதுதான் நடப்பிற்கு வருகிறது என்பதை உணரலாம்’’என்கிறார்.