“கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்” – அமைச்சர் கே.சி.வீரமணி

 

“கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்” – அமைச்சர் கே.சி.வீரமணி

தேர்தல் களத்தில் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்று போட்டியிட அதிமுக தயார் என்றும், இதற்கு திமுக தாயரா? எனவும் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களிடம் உரையாற்றி அவர் இதனை தெரிவித்தார்.

“கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்” – அமைச்சர் கே.சி.வீரமணி

மேலும், தேசிய அளவிலே அதிமுக மூன்றாவது பெரிய கட்சி என்று தெரிவித்த கே.சி.வீரமணி, அதிமுக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி நடத்த முடியுமா? என்றும், அதிமுக தொண்டனின் ஆதரவு இல்லாமல் யாராவது ஆட்சிக்கு வர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் நிலோபர் கபீல், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வாணியம்பாடி நகரத்தில் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சாலைகள் போடப்பட்டதாகவும், அதனை திமுகவினர் தாங்கள் அமைத்ததாக கூறி மக்களிடத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.