CSK வீரர்களின் சென்னைப் பயிற்சிக்கு தோனிதான் காரணமா?

 

CSK வீரர்களின் சென்னைப் பயிற்சிக்கு தோனிதான் காரணமா?

ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஐபிஎல் பற்றிய செய்திகள் சூடாகப் பகிரப்படுகின்றன.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

CSK வீரர்களின் சென்னைப் பயிற்சிக்கு தோனிதான் காரணமா?

அதற்கான பயிற்சிகளில் அனைத்து அணிகளும் மும்முரமாய் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆகஸ்ட் 15 முதல் 20 ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டது.

இந்தப் பயிற்சியில் CSK டீமின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். வீரர்கள் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட பின் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஜடேஜா கலந்துகொள்ளவில்லை. நேரிடையாக ஐக்கிய அமீரகத்தில் கலந்துகொண்டார்.

CSK வீரர்களின் சென்னைப் பயிற்சிக்கு தோனிதான் காரணமா?

சென்னையில் கொரோனா தொற்று அதிகளவில் இருக்கும் சூழலில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி தேவைதானா என்ற கேள்வி அப்போது எழுந்தது. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டி ஒன்றில், “சென்னையில் பயிற்சி தொடர்பாக தோனியிடம் ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது அவர் சென்னையில் பயிற்சி வேண்டும் எனச் சொன்னார்.

ஏனெனில், தாங்கள் நான்கைந்து மாதங்களாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட வில்லை. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஒன்றாக பயிற்சி ஈடுபட வேண்டும் என்பதாலும் அதை சொன்னார். மேலும், சென்னையில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தால், அதேநிலை ஐக்கிய அமீரகத்திலும் நீடிக்க உதவும் என்றதாகத் தெரிவித்துள்ளார்.