ஆஸ்திரேலிய BBL கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஆடுகிறாரா?

 

ஆஸ்திரேலிய BBL கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஆடுகிறாரா?

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. முன்பெல்லாம் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் அணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் அவரின் ஆட்டத்தை ரசிகர்கள் திரும்ப பார்க்கவே முடியாது. ஆனால், ஐபிஎல் அதற்கான அழகான வாய்ப்பை வழங்கி வருகிறது. சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக் தொடங்கி இப்போது தோனி, ரெய்னா வரை உதாரணம் சொல்லலாம்.

ஆஸ்திரேலிய BBL கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஆடுகிறாரா?

அதேபோல நேரடியாக இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியாத இளம் வீரர்கள்கூட ஐபிஎல் போட்டிகளில் தங்களின் அதிரடி திறமைக் காட்டுகிறார்கள். அதன்வழியே இந்திய அணிக்குள் நுழைந்து விடுகிறார்கள்.

ஐபிஎல் – போட்டியின் மாடல் எல்லோருக்குமே பிடித்துவிட்டது. மேலும், இதை நடத்தும்போது கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் லாபமும் கிடைக்கிறது. அதனால், உலகின் பல நாடுகளும் இதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன. அடுத்த மாதம் எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் தொடங்குகின்றன.

ஆஸ்திரேலிய BBL கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஆடுகிறாரா?

ஆஸ்திரேலியாவில் இதே பாணியை பின்பற்றி பிபிஎல் (big bash league) 2011-12 ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் – பிப்ரவரி மாதங்களில் நடக்கும் பிபிஎல் போட்டி இந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 6-ம் தேதி நடத்துவதாகத் திட்டமிட்டுள்ளனர்.

ஐபிஎல் போலவே பிபிஎல் போட்டிகளிலும் எட்டு அணிகள். அவர்களுக்குள் மோதி ப்ளே ஆப் சுற்று, இறுதிப் போட்டி என வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் வெளிநாட்டு வீரர்களை களம் இறக்குவதில் பிபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.

ஆஸ்திரேலிய BBL கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஆடுகிறாரா?

ஆகஸ்ட் 15 அன்று மகேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் தங்களது ஓய்வை அறிவித்துவிட்டனர். அதனால், இருவரையும் ஆஸ்திரேலிய பிபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காக பிபிஎல் நிர்வாகம் அழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தோனியும் ரெய்னாவும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஏற்கெனவே யுவராஜ் சிங் ஆஸ்திரேலிய பிபிஎல் போட்டிகளில் ஆட முயற்சி எடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.