கொரோனா இல்லையா… மறைக்கப்படுகிறதா? – கொங்கு மக்கள் பீதி

 

கொரோனா இல்லையா… மறைக்கப்படுகிறதா? – கொங்கு மக்கள் பீதி

தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்து வருவது நம்பும்படியாக இல்லை. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மார்ச் சென்னை, காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதாக முதன்முதலில் செய்தி வெளியான நிலையில், ஈரோட்டு மாவட்டத்திலும் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. எதற்கு ஈரோடு மாவட்டத்துக்கு தடை என்று பலரும் குழம்பியநிலையில்தான் அங்கு மிகப் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இத்தனை நாட்களாக தமிழக அரசு இதை மறைத்ததா என்ற கேள்வி எழுந்தது. அதன்பிறகு மாநிலம் முழுக்க கொரோனா தொற்று ஏற்படவே ஈரோடு மாவட்ட விவகாரம் மறந்தே போனது.

கொரோனா இல்லையா… மறைக்கப்படுகிறதா? – கொங்கு மக்கள் பீதிதற்போது கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை என்று தினம் தினம் அறிவிப்பு வெளியாகிறது. கொரோனாவை விரட்டி அடித்த கோமானே என்று அமைச்சர் ஒருவரை புகழ்ந்து தினம் தினம் புதுப்புது போஸ்டர்கள் கோவை முழுக்க ஒட்டப்பட்டு வருகிறது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர்களுக்கு உணவு தயாரித்து கொடுத்த கேன்டீன் சமையற்காரர் வரை பலரையும் பதம் பார்த்த கொரோனா பாதிப்பு திடீரென்று எப்படி இல்லாமல் போனது என்று சந்தேகம் எழுப்புகின்றனர் பொது மக்கள். அதேபோல், தங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தமிழக அரசு உண்மையை மறைக்கும் மோசமான செயலில் ஈடுபட்டு வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொரோனா இல்லையா… மறைக்கப்படுகிறதா? – கொங்கு மக்கள் பீதிமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் கொரோனா இருப்பது பிரஸ்டீஜ் பிரச்னையாக பார்க்கிறார். இதனால், கொங்கு மண்டலத்தில் கொரோனா இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால் கொரோனா நோயாளிகள் இல்லை என்று அறிவிப்பு மட்டும் வந்துகொண்டிருக்கிறது என்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்கு அறிகுறிகளுடன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பலருக்கு பரவியிருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது என்று கூறுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக ஈரோடு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றனர் பலரும். ஈரோடு மாவட்டத்தில் அரசு கணக்குப்படி 70 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஒன்றரை லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களில் 3000 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பாராட்டு விழா நடத்தி வருகின்றனர். மீதம் 1.47 லட்சம் பேருக்கு கொரோனா இல்லை என்று எப்படி உறுதி செய்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்கின்றனர்.

கொரோனா இல்லையா… மறைக்கப்படுகிறதா? – கொங்கு மக்கள் பீதிஇது குறித்து கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கூறுகையில், “சென்னையைத் தவிர வேறு எங்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது இல்லை. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் ரூ.4500 ஆகும் என்பதால் மக்களும் தயங்குகின்றனர். உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவில் அரசியல் செய்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல்” என்றார்.
கோவை கொங்கு மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, தினமும் எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்ற தகவலை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உண்மையிலேயே கொங்கு மண்டலத்தில் கொரோனா அழிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியே… அதே முறையைப் பின்பற்றி தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குறிப்பாக சென்னையில் ஏன் ஒழிக்க முடியவில்லை என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.