சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் கொரோனாவிலிருந்து இன்னும் விடுபட வில்லையா?

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் கொரோனாவிலிருந்து  இன்னும் விடுபட வில்லையா?

வரும் சனிக்கிழமை ஐபிஎல் திருவிழா உற்சாகமாகத் தொடங்கி விருக்கிறது. முதல் போட்டியே தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸோடு மோதுகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் டீம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் எதிரணியோடு மோதவிருக்கிறது. மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணி இது.

இந்த ஆண்டில் பல முன்னனி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கோப்பையை வெல்லும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் கொரோனாவிலிருந்து  இன்னும் விடுபட வில்லையா?

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் வீரர்களுக்கு சோதனை மேல் சோதனையாக இருந்துவருகிறது.

கொரோனா டெஸ்ட் முடிந்து சென்னையில் ஆகஸ்ட் 15 முதல் 20 –ம் தேதி வரை நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஜடேஜா, ஜர்பஜன் சிங் ஆகியோர் பயிற்சிக்கு வரவில்லை.

பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு கொரோனா நோய் தாக்கியிருந்தது. அவர் சிகிச்சையும் தனிமைப்படுத்திக்கொண்டும் கொரோனாவை வென்றார். தற்போது பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். முதல் போட்டியில் களம் இறங்குவார் என்றே தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் கொரோனாவிலிருந்து  இன்னும் விடுபட வில்லையா?

சென்னையில் முக்கிய வீரரான ருத்ராஜ் கைக்வாட்டுக்கும் கொரோனா தொற்று இருந்ததாகச் சொல்லப்பட்டது. தீபக் குணமடைந்த செய்தி வந்ததுபோல ருத்ராஜ் பற்றிய செய்திகள் வெளியாக வில்லை.

ருத்ராஜ் இன்னும் கொரோனா பிடியிலிருந்து விடுபட வில்லை என்ற செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், அவற்றை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமோ, ஐபிஎல் நிர்வாகமோ முறைப்படி அறிவிக்க வில்லை.

இதனால் கடும் குழப்பமே நிலவுகிறது. ருத்ராஜ் கொரோனாவிலிருந்து குணமாகி விட்டாரா… இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.