அரியர் தேர்வு ரத்து தவறான முடிவா? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

 

அரியர் தேர்வு ரத்து தவறான முடிவா? அமைச்சர்  கடம்பூர் ராஜூ விளக்கம்

கொரோனா ஊரங்கின் காரணமாக கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும தலைவர் அனில் சகஸ்ரபுதே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதத்தின் வாயிலாக பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது . அரியர் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையின்போது ஏ.ஐ.சி.டி.இ தனது முடிவைத் தெரிவிக்கும் என தெரிவித்துள்ளார்.

அரியர் தேர்வு ரத்து தவறான முடிவா? அமைச்சர்  கடம்பூர் ராஜூ விளக்கம்

இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நடுவிற்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’அரியர்ஸ் வைத்துள்ளவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை மக்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் மாணவர்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

அரியர் தேர்வு ரத்து தவறான முடிவா? அமைச்சர்  கடம்பூர் ராஜூ விளக்கம்

ஏ.ஐ.சி.டி.சி விதிமுறைகளின்படி அரியர்ஸ் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்கள் நலன் காக்க எடுத்த முடிவினை அனைவரும் வரவேற்த்துள்ளனர்.