மு.க. அழகிரியை சந்திக்கிறாரா பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ?

 

மு.க. அழகிரியை சந்திக்கிறாரா பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் மூன்று நாட்கள் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா. தனி விமானத்தின் மூலம் நேற்று, தமிழகம் வந்து சேர்ந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற ஜே.பி.நட்டா சென்று சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து, இன்று மதியம் பாஜக குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

மு.க. அழகிரியை சந்திக்கிறாரா பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ?

பின்னர், பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருக்கும் நட்டா மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் நடைபெறவிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உள்ளார். ஜேபி நட்டாவின் இந்த திடீர் பயணம் அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படும் நிலையில், திமுகவிலிருந்து பிரிந்து சென்ற மு.க அழகிரியின் பிறந்தநாளையொட்டி ஜே.பி நட்டா அவரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

மு.க. அழகிரியை சந்திக்கிறாரா பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ?

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஜேபி நட்டா தமிழகம் வந்திருப்பது பாஜகவின் கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே; அரசியல் நோக்கம் இல்லை என்று கூறினார். மேலும், ராகுல் காந்தி போன்று வேளாண் சட்டங்களை முழுமையாக படிக்காதவர்களே வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.