“இதெல்லாம் அரசியல் தர்மமா..?” –‘ஓபிஎஸ்’சை விளாசும் அரசியல் பார்வையாளர்கள் !

 

“இதெல்லாம் அரசியல் தர்மமா..?” –‘ஓபிஎஸ்’சை விளாசும் அரசியல் பார்வையாளர்கள் !

ஒட்டு மொத்த தமிழகமும், இன்று ஓபிஎஸ் என்ன சொல்வார் என்றுதான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது.

”அ.தி.மு.க.. பிளவுபட்டால் அது தி.மு.க.விற்கு சாதகம்” எனக் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் வரும் சமயத்தில் ‘ஒபிஎஸ்’சின் இத்தகைய நடவடிக்கைகள் தேவையல்ல .இது அவருக்கே பாதகமாக முடியும்? என்றே தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

“இதெல்லாம் அரசியல் தர்மமா..?” –‘ஓபிஎஸ்’சை விளாசும் அரசியல் பார்வையாளர்கள் !

அரசியல் வாழ்க்கையில் ஆரம்ப கட்டம் முதலே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாதவர் இ.பிஎஸ்… அவர் மீதும், அவரது ஆட்சி மீது யாரும் கை நீட்டி குற்றம் சொல்ல முடியாது என அமைச்சர்களே சொல்லும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் கட்சி இரண்டாக உடையுமானால் ஒருவரை ஒருவர் மேடைப் பேச்சுகள். மற்றும் அறிக்கைகள்.. பேட்டிகள் மூலம் தாக்கிக் கொள்வார்கள். தொண்டர்களும் ஒருவரை ஒருவர் மோதி கொள்வார்கள். அப்படி வரும் பட்சத்தில் ஒபிஎஸ்சுக்கு நிறைய பின்னடைவுகள் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

“இதெல்லாம் அரசியல் தர்மமா..?” –‘ஓபிஎஸ்’சை விளாசும் அரசியல் பார்வையாளர்கள் !

எம்ஜியாருக்கு பின் ஜெயலலிதா கட்சி தொடங்கிய போது ஜானகி அணியில் நின்று ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் ஒபிஎஸ்.ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக, சசிகலா கையில் வந்தது. அதன் பின்னர் கட்சியை இரண்டாக உடைத்துப் பார்த்து அதில் தோல்வியும் கண்டவர் ஓபிஎஸ். சில எம்.எல்.ஏக்கள் மூலம் அதிமுகவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கினார்.

இதுமட்டுமல்ல.. அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் கொண்டு வந்தார். இரட்டை இலை அவரால் முடங்கும் நிலைக்கு ஆளானது. தேவர் சமுதாயத்தை சேர்ந்தவரான அவர் அந்த சமூகத்திலும் போதிய செல்வாக்கு பெறவில்லை. தென் மாவட்ட தேவர் சமூக்கத்தினர் “எங்களுக்கு ஏதாவது சீட் வாங்கி கொடுத்தீர்களா? என்னதான் செயதீர்கள்?” என்ற கொதிப்பில் உள்ளனர்.

“இதெல்லாம் அரசியல் தர்மமா..?” –‘ஓபிஎஸ்’சை விளாசும் அரசியல் பார்வையாளர்கள் !

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அவரது மாவட்டமான ஆண்டிப்பட்டி, பெரிய குளம் தொகுதிகளில் கூட வெற்றிகனி பறித்து தர முடியவில்லை.இப்படிப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ்க்கு இதெல்லாம் தேவைதானா? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
–இர.போஸ்